‘இன்பமாய் இருக்குதய்யா’
X: ஏய் அங்க பாரு…
Y: புதுவரவா…!!என்னவாம்…?
X:மேல பாரு…
Y:அடேங்கப்பா இன்னைக்கி ஜாலிதான் ரொம்பநாள் ஆகுதுல…
X:ஏன் இப்டி அலையுற அந்தகதையா இருக்காது…
Y:ஏன் இப்டி மாறிட்ட…
X:ஆமா எத்தனவாட்டிதான் செஞ்சத திருப்பி திருப்பி செய்றது வெறுப்பாயிட்டு…
Y:அப்போ பக்கத்துவீட்டு ஆண்டி வேணாம்… ஹாஹாஹா…
X:
Y:என்ன பலமான சிந்தன…
X:ஒன்னுமில்ல…நம்ம கேரக்டர படிக்கும்போதே அப்டி ஒரு தாக்கமா இருக்கனும்…படிச்சவன் மறக்கவேகூடாது…அப்டி ஒருகதை…எப்போதான் கெடைக்கும்னு யோசிக்கிறன்…நல்லா இருக்கும்ல…
Y:நா நினைக்கிறன் இது லவ் ஸ்டோரினு…
X:வாய்ப்பு இருக்கு…அந்த ஃபர்னிச்சரதான் ஈசியா உடைக்கலாம்…
Y:ஆமா இவன் எழுதுவானா இல்லையா…
X:எழுத உடகாந்தான்
அவன் பையன் கணக்குல ஏதோ டவுட்டுனு கூப்டான் போயிருக்கான்…
Y:அப்போ பொறுமையா வந்தே ஃபர்னிச்சர உடைக்கட்டும்…
X:சிறுகதைகுள்ள மாட்டிகிட்டதால நமக்கு இந்த நிலம…ஏதாது தொடர்கதைல இருந்தோம்னா லைஃப் நல்லா போயிருக்கும் இங்கதான் எத்தனை கேரக்டர்…முடியல…
Y:தொடர்கதைல கஷ்டம் இல்லையா…போய் சிந்துபாத்த கேளு மண்டபத்ரம்…
XY:ஹாஹாஹா:joy:
X:புராணகதைல வரதுதான் கெத்து… ஒரு கூட்டமே கொண்டாடும்ல நமக்குதான் அது இல்லாமலே போய்ட்டு…இப்போ அப்படி கதை எழுதலா யாருமே இல்ல…
Y:அடேய் ஏன் இப்டி…இவனுங்க இருக்குற கதைக்கு அடிச்சுகிறது பத்தாதா உனக்கு…
X:சரியா சொன்ன அந்த கதைல செத்த மனுசனவிட இவனுங்க போட்ட சண்டைல போன உயிர் அதிகம்… உனக்கு ஒரு காமிடி தெரியுமா…இப்பதான் எனக்கு நியாபகம் வந்துச்சு…
Y:சொன்னா நானும் சிரிப்பன்ல
சொல்லிட்டு சிரி😉
X:இராமாயணத்துல இராமன் இராவணன கொன்ன அப்பறம் இராவணன் லக்ஷ்மன்ட போய் என்ன கேட்டு இருக்கான் தெரியுமா…
Y:முழுசா சொல்லிட்டு சிரி
ம்ம் சொல்லு…
இராவணன் to லக்ஷ்மன்
டேய் லக்ஷ்மன்
மஹாபாரதத்துல நீயாரு
நா…பீமன்
அப்போ நா… ?
நீ அர்ஜுனன்
திரௌபதிக்காக நாம சண்டபோட்டுக்கவே இல்ல
இங்கமட்டும் ஏன் இராமன் கொந்தளிக்கிறானு கேட்ருக்கான்…
XY:ஹாஹாஹா:joy:
Y:லக்ஷ்மன் என்ன சொன்னா ???
X ஆளவிட்ரானு ஓடிட்டானா…
Y:சரிசரி அடக்கிவாசி…
X:அந்த வாலி சம்பவம் மட்டும் சொல்லவா…
Y:வேணாம்பா…நீ டாப்பிக்க மாத்து…
X:இவன் எப்போதா எழுதபோறான்…
Y:அடவரட்டும் இரு…
X:உனக்கு எந்த ஆசையும் இல்லையா…
Y:இருக்கே… எதார்த்த வாழ்க்கைல நடக்குற சம்பவங்கள வச்சு எழுதுறகதையில வரணும்
ஒரு பத்துகத… அதுல கிடைக்கிற பத்து கேரக்டர் கொஞ்சபேரு மனசுல நின்னா கூட அதுபோதும்…
X:இறந்துபோன யாராது இப்போ இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறியா…
Y:ஏன் அப்படி கேட்குற…
X:நம்ம எதிர்பார்ப்ப அவங்க பூரத்தி செய்யலாம் தோனுது…
Y:அப்படி நினைக்கல ஆனா இப்ப உள்ளவங்க எப்டிலா எழுதபோறாங்க அப்டிங்குற ஆர்வம்தான் இருக்கு…
X:எப்படி எழுதுவானுங்க பாரு…
Y:வரமாறி இருக்கு…?
X:ஆமா வரான்…
(சிவா அங்கு வந்து அமர்ந்தான்…திரும்பி மகனை பார்த்து…
இந்த கணக்குல X And Y இரண்டுமே 1 ok…அடுத்த கணக்குக்கு X,Y நீயே கண்டுபிடி)
Y:ஏய் இங்க பாரு நம்மள பத்திதான் ஏதோ சொல்றான்…
X:நம்ம இரண்டுபேருமே ஒன்னுனு சொல்றான்🙂
Y:ஹாஹாஹா…சரியாதான் சொல்றான்…
X:இவங்கலா இல்லனாலும் நமக்கு வாழ்க்கை இல்லைல்ல…!!
Y:ஆமா வாஸ்தவம்தான்🤗
X:இத நினைக்கும்போது ஒன்னு சொல்ல தோனுது…
Y:என்ன…?
X:மேல பாரு…
/பாலாஜி மேகா