அன்பு கொண்டேன் உன்னிடம்
காரணம் ஏனோ?
புதிதாக பிறந்தேன் உன்னை
கண்டவுடன் ஏனோ?
உன் நிழலுக்கும் தெரியாமல்
பின்தொடர்ந்தது ஏனோ?
உன்னை கண்டு கூறினேன்
என் அன்பினை ஏனோ?
நம் இதயம் ஒன்றானது அந்த
காலத்தினால் தானோ!!
விழிகளால் பேசினோம் இந்த
உலகத்தை மறந்து ஏனோ?
சுக துக்கங்கள் கண்டோம் நம்
அன்பு சண்டைகளில் ஏனோ?
அனைத்தயும் எதிர் கொண்டேன்
உன் அன்பினால் ஏனோ?
நீ என்னோடு இருப்பாய்
என்ற தைரியத்தினால் தானோ!!
இன்று இவற்றை எழுதுகிறேன்
உன் நினைவுகளால் தானே!!
அதைக் கண்ட ரசிக்க
நீ இல்லையே ஏனோ?
நம்மை பிரிக்க அந்த
மரணம் வந்தது ஏனோ?
நம் காதல் பிரியும்
என்ற ஆசையினால் தானோ!!
இதயம் இல்லாத இந்த உடல்
உயிர் வாழ்வது ஏனோ?
நம் காதல் போன்று வேறில்லை
என்று சொல்லுவதற்காக தானோ!!