அம்மா,
உன் முகம் பெருமையால் மலர வேண்டும்!
உன் உள்ளம் பூரிப்பால் நிறைய வேண்டும்!
நீ செய்த முயற்சிக்கெல்லாம் பலன் கிடைக்க வேண்டும்!
நீ கொண்ட கவலையெல்லாம் கானல்நீராக
மாற வேண்டும்!
நீ கொண்ட ஆசையெல்லாம் நிறைவேறி
அணிவகுத்து நடைபயில வேண்டும்!
உன்னை இந்த உலகம் போற்ற வேண்டும்!
நீ தலைநிமிர்ந்து பெருமையுடன் இத்தரணியில் வலம் வர வேண்டும்!
உன் விழியோரம் ஆனந்த ஈரம் நான் காண வேண்டும்!
உன்னை பார்த்து மற்றவரெல்லாம் மூக்கின் மீது
விரல் வைக்க வேண்டும்!
கேலி செய்த நாவெல்லாம் தன் தவறை உணர வேண்டும்!
இதுவே என் ஆசை இதுவே என் கனவு!
இதுவே என் ஏக்கம் இதுவே என் நோக்கம்!
இதுவே என் இலட்சியம் இதுவே என் இறைவேண்டல்!!!