கானலின் காதலி
இளவேனிற் பொழுதில்
பகலவன் மங்கும் வேளையில்
கருமேகம் மெல்ல மெல்ல வானில் படர
சில்லென காற்று
என் மேனியில் படர
சாளரத்தின் அருகே
சுட சுட காப்பியுடன்
கையில் கோப்பையுடன்
நின்றிருந்தேன்…!
முதுகில் விழுந்தது ஒரு நீர்த்துளி…!
ஏதென்றறிய திரும்பும் முன்
என் இடையை பற்றி இழுத்து
சுற்றி வளைத்தது
அவன் கரம்…!
ஜில் காற்று
என் சம்மதம் பெறாமலே
சூடாய் மாறி
இருவரிடையே பரிமாற துவங்கியது…!
கழுத்தில் பதிந்தது அவன் முத்தம்…!
நாணம் கொண்டு திரும்பையில்
முகத்தில் பட்டது மழைத்துளி…!
கண்ணை திறந்துகொண்டேன்…!
கேட்டது கதவு தட்டும் சத்தம்…!
திறந்தேன்…!
வெளியே
முழுவதும் நனைந்து
என்னை நனைக்க காத்திருக்கும் அவன்…!
நாணத்துடன்,
நான்…
(கானலின் காதலி)