Community

சேர ராஜ்யத்தில் ஒரு காதல் கதை

என்று தான் என்னை மணந்து கொள்ள போகிறாய்! வீரசெழியா? சொல்…

உன்னை என் மனதில் மணந்து இத்தோடு, ஆயிரம் திங்கள் முடிய போகிறது,

இளவரசன் என்ற கர்வம் தடுக்கிறதோ, இந்த அநாதை கன்னியை மணந்து கொள்ள, தயவுசெய்து சொல்… அவள் கண்ணீர் தரையை தொடுகிறது

நீ தானே! காதலிக்கிறேன் என்றாய்!
நீ தானே என் மனதை வென்றாய்!

இதுவரை அமைதியாய் நின்றவன்.
இந்த முறை
ஹா! ஹா! ஹா!
ஆநாதை பெண்ணிற்கு இளவரசன் கேட்கிறானோ? குளத்து மீன் தரையில் நடக்க ஆசைப்படுகிறதோ!
ஹா! ஹா! ஹா!
மீண்டும் சிரித்தான்

இதுவரை அவள் கண்ணில் இருந்த சிறிய நம்பிக்கையும் மறைந்தது! தரையில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

இவன் காதல் வார்த்தைகளுக்கு, என் நம்பிக்கையோடு சேர்த்து என் கற்ப்பையும் இழந்து விட்டேனே என அவளுக்கவளே பிதற்றிக்கொண்டு அழுதாள்!

வீர செழியன், அடியேய் மீனாட்சி என அவளை தழுவி தூக்கிட! ஒரு வித அறுவருப்பினால் அவனை தள்ளிவிட்டாள்.

மீனாட்சி, என சீறினான், இத்தனை நாளாய் அடிபணிந்தவள். இந்த முறை எல்லாம் முடிந்ததே என்ற படி அவனை பார்த்தாள்.

அடேய்! செழியா. செழியா. எழுந்திரு!

எழுந்து பார்த்தவன், சுய நினைவை அடைந்தான்!

போட்டி இன்னும் கால் நாழிகையில் தொடங்க போகிறது! போட்டி களத்திற்கு செல்லலாம் வா! என அவன் நண்பன், அவனை அழைத்து சென்றான்.

போட்டி களத்தில், அடிமைகளுடன் அடிமையாய் இவனும் நின்றிருந்தான்.

அனைவரின் கைகளிலும் வாள்கள் வழங்கப்பட்டன,

மக்கள் வட்டமாய் அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொள்ள, அங்கு அமைந்த கூட்டத்தில் ஒருவன் இன்றைய போட்டி, உங்களில் இருவர் இருவராக குழுக்கள் அமைக்கப்படும்

அந்த குழுக்களில் எந்த குழு யாணையை கொல்கிறதோ! அவர்களே வெல்பவர்கள்

மற்றவர்கள் சிறுத்தைக்கு இறையாக்க படுவீர்கள் என்று அறிவித்தான்.

மொத்தம் மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டன, வீர செழியன் தனது நண்பனுடனையே குழுவாக்கப்பட்டான்.

போட்டி தளத்தில் யாணை திறந்து விடப்பட்டது, வீர செழியன் தன் நண்பனிடம் கண் காட்டி கடைசியில் நிற்கும் படி செய்தான், முதலில் மற்ற இரண்டு குழுக்கள் யாணையை நெருங்க, வீர செழியன் கொஞ்சம் காத்திரு என்றான் மீண்டும் நண்பனை பார்த்து,

நண்பனும் சரி என தலை அசைக்க!

முதலில் நெருங்கிய இருண்டு குழுவில் ஒரு குழுவை, யாணை மிதித்து கொன்றிருந்தது.

மற்றோரு குழு யாணையின் முன் பக்கம் தாக்க பார்க்க! வீர செழியன் கை காண்பித்து, யாணையின் பின்னால் தாக்கலாம் என்ற படி முதலில் ஓடி யாணையின் பின்னங்காலை வேகமாக தாக்கினான்.

சற்று பலத்த காயத்தை அது ஏற்படுத்திட, யாணை கோபத்தில் திரும்பியது இவனது பக்கமாக

இவன் தற்போது தந்தத்திற்கு நேராக நிற்க, மற்றோரு குழு யாணையின் வலது புறம் இருந்தது.

அவனது நண்பனை பின்னால் நிற்கும் படி சைகை செய்து யாணையின் வலது புறமாக இவன் ஓடினான்.

கோபத்தில் தந்தத்தை சுழற்றிய யாணையின் பிடியில் மற்றொரு குழுவில் ஒருவன் அகப்பட்டான், அது அவனை சுழற்றி எறிய எடுக்கப்பட்ட காலத்தை பயண்படுத்தி அதன் மற்றொரு பின்னங்காலில் வாளால் தாக்கினான்

யாணையால் வேகமாக நகர முடியவில்லை, சற்று மெதுவாகவே நகர்ந்த யாணையின் முன்னே, வீரச்செழியன் மிஞ்சி இருந்த ஒருத்தனை வேகமாக தள்ளிவிட்டு… யாணையின் மேல் இலாபகமாக ஏறினான்.

யாணையின் தலையை வாளால் வெட்ட சென்றவனின் பார்வை கூட்டத்தை நொக்க! ஒரு சிறு குழந்தை ஆர்வமாக இவனையே பார்த்தது.

வீரச்செழியா! என்னை கொன்று விடு… கொன்று விடு…

காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் ஏதென்று அறியா பாதகி இவள்

இளவரசே! கொன்றிடுங்கள் இந்த அநாதை பெண்ணை எவரும் தேடபோவதில்லை, என இதுவரை கெஞ்சியவள்

இந்த முறை அவள் அவனது வளை உறையில் இருந்து எடுத்து தன்னை தானே வெட்ட போக! வீர செழியன் அவளது சேலையின் மாராப்பை அதன் முனையோடு வேகமாக இழுத்தான்

மொத்தமாக கிழிந்து அவன் கையில் வந்து விட, அவள் தனது கைகளால் அவளது அங்கங்களை மறைத்தாள்.

மீண்டும் பயங்கரகாக சிரித்தான், ஏதும் புதிதாக பார்க்க போகிறேனா! என்ற படி கேட்டுவிட்டு,

ஒவ்வொரு முறையும் உன் மாராப்பை கிழிக்கும் போது முரடன் என்பாய், அந்த முரடனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறாய்!

வாளால் என்னை கொன்றிருக்க வேண்டாமா!

இன்றைய தினத்தில் நான் நடந்தது போல எப்போதாவது உன்னிடம் நடந்தால் என்னை இந்த வாளால் கொன்று விடு, நீ காதலித்தது இமயம் வரை வென்ற சேர வம்சத்தின் இளவரசரை! அத்தகைய வீரம் வேண்டாமா உனக்கு என்றான்

புரியாமல் பார்த்த அவளை அணைக்கிறான்!

கூட்டத்தையே பார்த்த வீரச்செழியனை யாணை தன் தந்தத்தால் சுழற்ற!!! அவனது தோழன் யாணையின் வயிற்றை அதன் அடியில் சென்றே குத்திகொண்டு நகர்ந்தான்

அடிவயிற்றில் குத்துப்பட்ட! யாணை கீழே விழுந்தது! சுய நினைவு வந்த வீர செழியன் அக்குழந்தையையே மீண்டும் தேடுகிறான்! காணவில்லை

அவனது நண்பன்! என்ன ஆயிற்று உனக்கு என மீண்டும் அவனை அடிமைகள் தங்கும் இடத்திற்கு கூட்டிச்செல்ல! வீரச்செழியன் நான் மீனாட்சி சாடையில் ஒரு குழந்தையைப்பார்தேன்

மீனாட்சியை பார்த்தது போலவே இருந்தது என்க, என்ன வீர செழிய!!! அன்றே சொன்னேன் அவளை நம்பாதே என்று.

நீ அவளுக்காக இங்கே கடினப்படுகிறாய்! அவள் வேறொருவனை மணந்து கொண்டாளா! என இவனைப்பார்த்து கேள்வி கேட்க…

வீரச்செழியன் என் குழந்தை எத்தனை அழகாய் இருந்தாள் தெரியுமா என்றான்.

இந்த பதிலை அவன் எதிர்பார்க்க வில்லை!

மறுநாள் காலை!!!

இன்று கடைசி போட்டி, அத்தோடு முடிவடைகிறது இந்த தண்டனை!!! தண்டனை முடிந்ததும் நியே என் படை தளபதி என நண்பனை பார்த்து சிரித்தான்.

சிரித்தவன் நண்பனை கட்டி அணைத்தான்,

தந்தையே! நான் ஒரு ஓடக்கார பெண்ணை காதலிக்கிறேன்! அவளையே மணக்கப்போகிறேன்.

அடுத்து பேச அவன் தொடங்கும் முன்னே! அவனது அரசர்

ஓடக்கார பெண்ணா! ஏற்கனவே ராஜ்ஜியத்தில் குழப்பம்! இதில் நீ சிற்றரசர்களின் மகளை மணக்காமல் தூர தேச அரசர்களின் மகளை காதலித்தாலே உள்நாட்டு போர் எழும், இதில் ஓடக்கார பெண்ணா!!! முடியாது என அரசர் அரசவையில் சற்றும் யோசிக்காமல் மறுக்க!

வீர செழியன்! தன் அரியாசனத்தை விட்டு எழுந்து, தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறடி பாய்வான் என்பது போல! அரசரினின் பேச்சில் உடன்பாடில்லை மேல் முறையீடு செய்கிறேன் என்கிறான்.

முறையீடு செய்ய அரசவையில் உனக்கு இன்னொருவரின் ஒப்புதல் தேவை என அரசர் மீண்டும் உரைக்க! தனது நண்பனை பார்கிறான்

தன் நண்பனின் பார்வையின் அர்த்தம் புரிந்து அவனும் எழுந்தான்

மேல் முறையீடு தொடங்கப்பட்டது! மந்திரி முறையீட்டை தொடங்கினார். இந்த அரசவையில் அரசரின் தீர்பே இறுதியானது! ஆனால் தீர்ப்பில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் மேல் முறையீடு செய்யலாம்.

மேல் முறையீட்டிற்கு அரசவையில் இருவருக்கு அரசரின் தீர்ப்பில் உடன்பாடில்லாமல் இருக்க வேண்டும்!

என மந்திரி சட்டத்தை ஒருமுறை வாசித்துவிட்டு முறையீடு நடைமுறை படுத்த படவேண்டும் என்றால் உங்களில் ஒருவன் அடிமை சிறையில் மூன்று வருடம் அடைக்கப்பட வேண்டும்! அங்கு நடக்கும் போட்டிகளில் இறுதியாய் அவன் வென்றாலே அவன் முறையீடு நிறைவேறும் என்றார்.

வீரச்செழியன் நானே அடிமை சிறை செல்கிறேன் என மந்திரியை நெருங்க! அவனது நண்பன் எனது இளவரசரை காக்க நானும் சிறை வருகிறேன் என்கின்றான்.

அரசவையில் அருகில் நின்ற நண்பன், வீரசெழியனின் அருகில் வந்து யார் அந்த பெண் எனக்கு சொல்ல கூடாதா? என்றான்

என் நண்பனின் மேல் நம்பிக்கை என்மீது எனக்கு உள்ள நம்பிக்கையைவிட அதிகம், ஆனால் அவன் அரச குடும்பத்தின் கர்வத்தின் மேல் துளியும் இல்லை என்றான்.

நிஜ உலகத்தில் பயணித்த வீரசெழியன், நண்பனுடன்
போட்டி நடக்கும் களத்திற்கு ஒன்றாக சென்றனர், அங்கே அவர்களின் எதிரே மூவர் நின்றிருந்தனர்! அவர்கள் இவர்களை விட உயரம் அதிகம் ஆனவர்கள் பலசாலிகள் போல் தோன்றினர்.

போட்டி தொடங்கிட! மூவரில் ஒருவன் வீரசெழியனை நோக்கி நகர்ந்தான்.

வேகமாக வாளை இவனை நோக்கி வீச! வீர செழியன் குனிந்து அவனது வயிற்றில் விளால் கிழித்து விட்டு நண்பனை தேட! பின்னால் இருந்து ஒருவன் அவனை கத்தியால் கையில் திக்கினான்,

திடுக்கிட்டு திரும்பியவனின் பின்னால் இருந்து இன்னொருவன் மிதித்து கிழே தள்ளினான்! அந்த போட்டி களத்தின் ஓரத்தில் அவன் விழுந்தான்

நண்பா உன் காதலை நான் மதிக்கிறேன்! எதற்கும் உன் காதலியிடம் இங்கு நடந்ததை சொல்லிவிடு! உனக்காக காத்திருப்பாளா? நாம் அடிமை சிறையில் இருந்து மீண்டு வர மூன்று வருடங்கள் ஆகும் அதுவரை காத்திருப்பாளா! என்ற தன் நண்பனின் பார்வைக்கு

என் மீனாட்சி என்று என்று மட்டும் பதிலளித்தான்!

பழைய நினைவுகள் அவனை ஆட்கொள்ள!!! எழுந்திரு, எழுந்திரு என்ற மழழையின் குரல்

கண்விழித்து பார்த்தவனுக்கு மேல் மீனாட்சி சாடையில் அவன் பார்த்த அதே குழந்தைதான்

அதன் அருகில் அவள் அமர்ந்திருந்தாள்! அவள் ஆரவாரம் செய்ய வில்லை, கண்களில் கண்ணீருடன் சிரித்தாள்.

தாக்க வந்தவனை பார்த்து வேகமாக சிரித்தவன்! மீனாட்சியை ஒருமுறை நன்றாக பார்த்துவிட்டு திரும்பி இதுவரை எவரையும் தாக்காத வேகத்தையும் பலத்தையும் கொண்டு வந்தவனை தாக்க! அவனது தலை துண்டானது. தனது பலத்தை காதலிடம் காண்பிக்க அவ்வாறு செய்திருக்கலாம்.

மற்றொருவனை அவனது நண்பன் முன்பே கொன்றிருந்தான்.

வீரசெழியன்! அரசவையில் மேல் முறையீட்டில் வெற்றி பெற்று மீனாட்சியை சேர இளவரசியாய் கூட்டி வந்தான்.

அவனது தந்தை வீரச்செழியனை அந்த கணத்தில் தனிமையில் அழைத்து மகனே! அவள் உன்னை கண்டு மூன்று வருடம் ஆகிறது!!! கையில் ஒரு குழந்தையுடன் தனியாக இருக்கிறாள்

குழந்தை மீதும் சந்தேகம் இல்லையா? அவள் மீதும் சந்தேகம் இல்லையா!

உன்னை விட்டு மூன்று ஆண்டுகள் பிரிந்து இருந்தவள் அவள் என்ற தந்தையின் கேள்விக்கு

வீர செழியன் தந்தையே! இரண்டு காரணங்கள் உள்ளது அவள் மேல் எனக்கு சந்தேகம் வராமல் இருப்பதிற்கு

ஒன்று அவள் என் மீனாட்சி

இரண்டு நானும் அவளை விட்டு மூன்று வருடம் பிரிந்து தானே இருந்தேன்! அவள் சந்தேகம் கொள்ள வில்லையே என்மீது!

ஆணிற்கு ஒரு நியாயம் பெண்ணிற்கு ஒரு நியாயமா? என்று சிரித்தான்

1 Like