"வெண்ணிலவும் தேவை இல்லை
உன் வெட்கம் மட்டும் போதுமடி
வெறுமென வெரும் வாயால்
சொல்லி விட்டால் வேதனைகள்
சொல்லி அழ மாலாதடி கன்னி
ஆசை என்றும் தீராதடி "
கற்பனைகலும், கனவுகளும்
கட்டிலின் மேல் வந்து வந்து
போகுதடி விட்ட நாணம் தொட்டவுடன்
பற்றிக்கொள்ள உன் மேனி எங்கும்
மெய் சிலிர்க்க முக்குலித்த முத்துக்கலும்
முத்தமிட ஏங்குதடி சத்தம் ஏதும்
இல்லாமல் சலவை செய்ய சொல்லுதடி
உத்தரவு சொல்லிவிடு உன் ,
இதழ்கள் அள்ளி கொடுத்து விடு
உன் தேகமெங்கும் தேன் சுரக்க
தேடி வந்து நான் சுவைக்க
தேடி பார்க்காத தேடல்கலும்
மனம் தேடிப் பார்க்க சொல்லுதடி
ஆசை வந்து நெஞ்சை கிள்ளுதடி
தேவைகளும் தீர்ந்துபோக வெட்கங்கலும்
கண்ணில் சொக்குதடி தொண்டை
குழியில் வார்த்தை சிக்குதடி
இரவு முழுக்க உனதாக்க
கட்டிலும் இங்கு காவல் காக்குதடி.