Community

விட்டில் பூச்சியாய்

   அனிதா.. அனிதா.. எந்திரிம்மா.. பள்ளிக்கூடத்துக்கு நேரமாகுத்துல.. பக்கத்து வீட்டு ராஜா எல்லாம் காலங்காத்தாலே எப்படி படிக்கிறான் தெரியுமா..?.. மணி 7 ஆக போகுது நீ இன்னும் தூங்குற.. எந்திரிடி.. 

   என்று படபடவென்று சமையல் வேலைகளை முடித்த படியே அவளிடம் அம்மாவான அமுதா போராடிக் கொண்டிருக்க , அந்த பெயருக்கு சொந்தக்காரியான அனிதாவோ நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்...

   அனிதா இன்னிக்கு நான் சீக்கிரமா கிளம்பனும்டி .. வேகமா எந்திரிச்சு தயாராகு.. அடுத்த வருஷம் பன்னிரெண்டாம் வகுப்பு போக போற.. ஆனா படிப்புல ஒரு அக்கறை இருக்கா பாரு.. என்னத்தை பண்ண போறியோ.. என்று புலம்பிக்கொண்டிருக்க..

   "அம்மா ஏம்மா காலங்காத்தாலேயே.. ஆரம்பிக்கிற , நான் எந்திருச்சுட்டேன்.. போதுமா... "

“சரி … சரி முதல்ல போய் குளி… நான் போய் உனக்கு சாப்பாடு போட்டு வைக்கிறேன்…”

“அம்மா என்ன விசேஷம்… அவங்க வீட்டுல… ?”

 "அது அவங்க மகளுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம்.. கூட மாட ஒத்தாசையா இருக்கனும்னு என்னை சீக்கிரமாவே வர சொன்னாங்க.."

 "ஒஹ்ஹ்.. சரி சரி.. வரப்போ நிறைய பலகாரம் கொண்டு வா.. " 

  " அதெல்லாம் அவங்க கொடுகிறப்போ பார்த்துலாம்.. நாமளா போய் அப்டிலா கேட்டு வாங்க கூடாதுடி.."

 "என்னமோ போம்மா.. நாம அதெல்லாம் இனி எப்போ சாப்பிடுவோம்.. அதான் சொன்னேன்.. சரி நான் போய் குளிக்கிறேன்.." என்று அவள் சென்று விட 

    அமுதா இருந்த இரண்டு தக்காளிகளை போட்டு .. சாதத்தில் கிளறி வேகமாக அவள் மகளின் டப்பாவில் அடைத்தவள் மீதமிருக்கும் சாதத்தை அவளுக்கு ஒரு டப்பாவில் அடைத்து , பின் அதையே காலை உணவாக தட்டில் போட்டு அவள் குளித்து முடித்து வருவதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தாள் ...

     அவள் வந்ததும் அவளுக்கும் தட்டில் சாதத்தை போட்டு ..அவள் சாப்பிட சாப்பிட அமுதா அவளுக்கு தலை வாரி விட்டாள்..

"அனிதா ..நான் எப்போவும் சொல்றதுதான் .. உன்னோட கவனம் படிப்புல மட்டும்தான் இருக்கனும்.. தேவையில்லாத விஷயத்துலலாம் மனசை அலைபாயவிடாத.. நீ நல்லா படிச்சு பெரிய ஆபிசரம்மாவா வரனும்.. சரியா.."

“போதும்மா இதோட எத்தனை தடவை இதை சொல்லிட்டே… என்னதான் படிச்சாலும் மண்டையில ஏறது தானே ஏறும்…” என்று சலிப்புடன் கூற…

“போட்டேனா…வை… ஒழுக்கமா நல்லா படிக்கிற வழிய பாரு… சரி … நேரமாச்சு வேகமா கிளம்பு… நான் முன்னாடியே போற… வர கொஞ்சம் லேட்டாகும்டி… பாத்து பத்திரமா இரு… கோமதி அக்காகிட்ட சாவி கொடுத்துட்டு போ…”

  என்று பரபரப்பாக கூறி விட்டு, வேகமாக நடையை கட்டினாள்.. 

   அமுதா.. வாழ்வில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்தவள்.. கணவன் இல்லை.. ஒரே பெண் குழந்தை அனிதா.. அனிதா தான் அவளுக்கு வாழ்வதற்கான ஒரே பிடிப்பு.. காரணம் எல்லாம்.. அவர்கள் வசிப்பது பெரு நகரம் என்று மார் தட்டிக்கொண்டு வெளியே பிரம்மாண்டம் வேஷம் போட்டுகொண்டு சுவருக்கு பின்னால் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கி, முடக்கி வைத்திருக்கும் பகுதி ஒன்றின் நெரிசலான சந்திற்குள் இரு அறைகள் கொண்ட ஒரு வீட்டில்தான்.. அமுதா அதிகம் படிக்கவில்லை 12வது , அதுவும் பாதி.. 

அவள் தன் தெருவிற்கு பின்னால் வசிக்கும் பணக்கார எஜமான்களின் வீடுகளுக்கு தினமும் வீட்டு வேலை செய்துதான் தன்னையும் தன் மகளையும்
காப்பாற்றுக்கிறாள்… அனிதா அருகில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்… அமுதாவின் கனவு எல்லாம் தன்னை போல தன் மகள் வாழ்க்கையில் தோற்றுவிடக்கூடாது… அவளுக்கு கல்வி , நல்ல வாழ்க்கை என்று அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான்…

  ஆனால் அனிதாவோ இது எதைபற்றியும் கவலைப் படவில்லை.. அமுதா தனக்காகத்தான் இவ்வளவு தூரம் கஷ்டபடுகிறாள் என்பது கூட அவளுக்கு புரியவில்லை.. ஏனென்றால் அவள் வயது அப்படி.. பருவ வயது.. அந்த வயதிற்கே உரிய ஆடைகளின் மேலும் , அலங்காரங்கள் மேலும் உள்ள ஈர்ப்பு, சினிமா எனும் மாயையில் உழன்று கதாநாயகன் போல ஒருவன் தனக்கு வருவான் என்று அந்த வயதிற்குரிய சுரப்பிகள் அவள் உடலில் நன்றாக வேலை செய்ய.. படிப்பின் மீதான கவனம் அவளுக்கு குறைந்து போனது..

கடமைக்கென்று பள்ளிக்கூடம் சென்றாள்…

  அங்குதான் பள்ளிக்கூட வாசலில் தினமும் ஒரு 23-24 வயதை ஒத்த இளைஞன் அவளை பார்ப்பதும் பேச முயற்சிப்பதுமாக இருந்தான்.. தினமும் இரு சக்கர வாகனத்தில் வருவான் , நல்ல ரோமியோ போல உடையணிந்து கொண்டு அவளிடம் தினமும் விலையுயர்ந்த மிட்டாய்களை கொடுத்து அவளிடம் காதல் மொழிகள் பேசுவான்.. முதலில் மிட்டாய்க்கு ஆசைப்பட்டு பேச.. பின் அவள் மனதிலும் அவன் கதாநாயகன் ஆகி போனான்..

  அமுதாவோ காலை 8 மணிக்கு சென்றால் இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புவாள்.. அவள் பாவம் தன் மகள் தினமும் பள்ளி கூடத்திற்கு செல்கிறாள் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறாள்.. ஆனால் அவளோ அந்த காதல் ரோமியோவின் , ஜூலியட்டாக பைக்கில் பறந்து கொண்டிருக்கிறாள்.. கடந்த ஒரு மாதமாக.. 

 இரவு 9 மணி.. லட்சுமி அக்காளின் வீட்டில் நிச்சயம் முடிந்து ஓடாக உழைத்து களைத்த முகத்துடன் தாமதமாக தான் வீடு வந்தாள்.. வந்ததும் பக்கத்து வாசலில் கோமதி அக்கா அமர்ந்திருக்கவும் அவரிடம் பேசினாள்..

“அக்கா அனிதா வந்துட்டாளா… ஏதாச்சும் சாப்பிட்டாளா…” என்று அக்கறையாக கேட்க அவரோ…

“அதெல்லாம் இப்போதான் அமுதா வந்தா, நீ வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி… எவனோ ஒருத்தன் பைக்கில கொண்டு வந்து விட்டான்… அவங்கிட்ட பல்ல பல்ல காமிச்சு பேசிட்டிருந்தா… நான் அவ பேச்சு சத்தம் கேட்டு சாவி கொடுக்க வெளியே வந்தப்போ தான் இந்த கூத்த எல்லாம் பார்த்தேன்… அதான் நீ தப்பா நினைச்சாலும் பரவாயில்லைனு உன்கிட்ட சொல்லிட்டேன்… இது என்னமோ சரியில்லைன்னு தோணுது பார்த்துகோ அமுதா…” என்று அவரின் ஆதங்கத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தினார்…

ஆனால் எந்த பெற்றவள் தான் தன் பிள்ளையை பற்றி கூறிய உடனே நம்பிவிடுகிறாள்… அமுதாவும் அப்படித்தான்…

“அக்கா ஏன் புள்ளைய பத்தி தப்பா பேசாத… அவ யாராச்சும் தெரிஞ்சவங்களா இருக்கும் அதான் நின்னு பேசிருப்பா… மத்தபடி அவ அப்படிலாம் பண்ற பொண்ணு இல்லக்கா …” என்று என்ன தான் தன் மகளை விட்டு கொடுக்காமல் பேசினாலும் அவளுக்கும் ஏதோ உறுத்தியது… அவளுக்கே இங்கு சொந்தமுமில்லை , பந்தமுமில்லை இதில் தெரிந்தவர்கள் ஏது?..
யோசனையுடனையே வீட்டிற்குள் சென்றாள்…

 கோமதியோ.. எனக்கென்ன ஏதோ நல்லது சொன்னா நம்மகிட்டேயே சண்டைக்கு வந்திருவா போலயே.. என்று புலம்பிக்கொண்டே தன் வேலைகளை கவனிக்க சென்றார்..

   அமுதா உள்ளே நுழைய ... தொலைகாட்சியில் காதல் பாட்டை ரசித்து கொண்டிருந்தவள்.. டப்பென்று ஆஃப் செய்து விட்டு படிப்பது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்..

“அனிதா… எத்தனை மணிக்குடி வந்தே.?.”

“நான் பள்ளிக்கூடம் முடிஞ்சதுமே வந்துட்டேம்மா 7 மணிக்கே…” என்று பொய்யுரைத்தாள் பெற்றவளிடம்…

 அவளை மேலும் கீழும் ஆராயும் பார்வை பார்த்தவள்.. சரி என்று விட்டு விட்டாள்..

“சரி சாப்பாடு எடுத்து வை … நான் போய் மூஞ்சி கழுவிட்டு வரேன்… ஒரே அசதியா இருக்கு…”

“இல்லம்மா எனக்கு பசியில்ல… எனக்கு எதுவும் வேண்டாம் நீ போட்டு சாப்ட்டுக்கோ… நான் படிச்சு படிச்சு tired ஆயிட்டேன்… போய் தூங்குறேன்…” என்று நழுவிவிட்டாள்…

“ஏண்டி பசியில்ல… என்ன வெளிய எங்காச்சும் சாப்டியா…?”

“ஆமா நீ கொடுக்கிற அஞ்சுக்கும் பத்துக்கும் பிரியாணியா போடுவாங்க… அதெல்லாம் ஒன்னு இல்ல… வயிறு சரியில்லை… நான் போய் தூங்குற…”

“பின்ன நான் என்ன கோடீஸ்வரியா… இலட்ச லட்சமா கொடுக்க… அதிகமா பேசாம போய் படு…” என்று அவளை அதட்டியவள் தன் மகள் தன்னிடம் ஏதோ மறைப்பது போல உணர்ந்தாள்…

   அவளை கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று அமைதியாகவே இருந்தாள்.. அவளிடம் இது பற்றி எதுவும் பேசவில்லை.. ஒரு வாரம் சென்றது..

  அமுதா ஒரு நாள் சீக்கிரமாகவே வந்துவிட்டாள்.. அனிதா இந்நேரம் வந்திருக்க வேண்டியவள் வரவில்லை.. அவளுக்காக வெளியே காத்திருந்தவள் அன்று கோமதி சொன்ன காட்சியை கண்கூடாகக் கண்டாள்.. அவளுக்கோ தூக்கி வாரி போட்டது.. இதற்கு சீக்கிரமே முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தாள்..

 அனிதா அவள் அம்மா தன்னை பார்த்ததை கவனிக்கவில்லை.. எப்போதும் போல வர வீடு திறந்திருப்பதை பார்த்தவள் பயத்தை மறைத்து கொண்டு எப்போதும் போல உள்ளே வந்தாள்..

“அனிதா… ஏன் இன்னிக்கு இவ்ளோ நேரம்?” என்று கேட்க…

“அம்மா இன்னிக்கு பள்ளி கூடத்துல சிறப்பு வகுப்பும்மா… அதான் லேட்டு…” என்று எந்த உறுத்தலும் இன்றி பொய்கூறி விட்டு அவள் பாட்டிற்கு சென்று உடை மாற்றிக் கொண்டிருக்க… அமுதாவிற்கு சுருக்கென்றது… தன் மகள் தன்னிடம் எவனோ ஒருவனிற்காக பொய் சொல்லுவது அவளுக்கு வலித்தது…

    அவளிடம் ஏதும் பேசவில்லை.. அமைதியாக சாப்பிட்டு உறங்கினர்..

    காலை அவள் வேலைக்கு போக வில்லை .. அவளை கேள்வியுடன் பார்த்த அனிதாவிடம் ..

  "இன்னக்கி நீயும் பள்ளி கூடத்துக்கு லீவு சொல்லிடு நம்ம வெளிய போறோம்.. " என்று அவளின் மொத்த கேள்விகளுக்கும் ஒரே தொடரில் பதிலை முடித்தாள் அமுதா..

 "எங்கம்மா போறோம்.. அதுவும் சும்மாவே நீ எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டே... எங்க போறோம்.. ஹாஸ்பிடலுக்கா? .. உனக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா. ?"

"இல்லை அங்கெல்லாம் இல்ல.. நாம வேற இடத்துக்கு போறோம்.. உனக்கு புடிச்ச இடத்துக்கு.."

"எனக்கு புடிச்ச இடமா… என்னவா இருக்கும் "என்று யோசித்தவள்… எதுவா இருந்தா என்ன… தனக்கு பிடித்த இடம் தானே , அதுவும் பள்ளிக்கு வேறு இன்று முழுக்கு போட்டாயிற்று பிறகென்ன என்று வேகவேகமாக கிளம்பி வந்தாள்…

  இருவரும் கிளம்பி டவுன் பஸ் பிடித்து அரை மணி நேர பயணத்தில் அங்கிருந்த கடற்கரை ஒன்றிற்கு வந்தடைந்தனர்..

  அங்கு வந்து நிழலாக ஓரிடத்தில் அமர்ந்தனர்..இருவரும் ... பின் அமுதா அங்கு விற்றுக்கொண்டு வந்த சுண்டல் பொட்டலம் ஒன்றை வாங்கியவள் அனிதாவை முதலில் சாப்பிட சொன்னாள்.. அவளும் கடற்கரைக்கு வந்த குஷியில் அமைதியாக சாப்பிட்டாள்.. அமுதாவோ அந்த நிசப்தமான சமுத்திரத்தையும் அங்கு மெல்ல மெல்ல மழலையின் ஸ்பரிசம் நம்மை தீண்டுவது போல கரையை தீண்டிய அலையையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவள் அதற்குள் சாப்பிட்டு முடிக்க.. 

“அனிதா… யாரு அந்த பையன்…?” என்று தன் கேள்வியாய் முன் வைத்தாள்…

“அம்மா…அது வந்து…அது… யாரும்மா. எந்த பையன்…” என்று மழுப்ப…

“என்கிட்ட எதையும் மறைக்காத அனிதா … எனக்கு எல்லா விஷயமும் தெரியும்…” என்று கூற…

"அம்மா அது வந்து அவன் நல்ல பையம்மா… நானும் அவனும்… காதலி…க்கிறோம்… " என்று மென்று விழுங்கி கூறி முடித்தாள்…

“ஒஹ்ஹ்… அவன் ரொம்ப நல்ல பையன்… சரிம்மா வேற என்னெல்லாம் தெரியும் அவரை பத்தி…”

“அம்மா…அது… அவன் பி.காம்… படிச்சிட்டு வேலையில்லாம இருக்கான்… அவன் படிப்புக்கேத்த வேலை கிடைச்சா போய்டுவான்ம்மா… அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லம்மா…நல்ல பையன்…”

"ஆமா அனிதா… இதெல்லாம் அவன் உன்கிட்ட சொன்னது… உனக்கு அவனை பத்தி முழுசா தெரியாது… அவன் படிப்பை பாதியிலேயே விட்டுட்டு… சேர்க்கை சரியிலாம போய் கஞ்சா , அது இதுன்னு வித்திட்டு இருக்கான்… அது தெரியுமா உனக்கு… "

அவளின் அம்மாவின் பேச்சை நம்ப மறுத்தவள்…

“அம்மா…நான் உன்னை நம்ப மாட்டேன்…நீ எங்கள பிரிக்குறதுக்காக என்னென்னமோ சொல்லுற… அவன் நல்லவம்மா… எங்களை பிரிச்சுடாதே…” என்று அழுதுகொண்டே கூறிய மகளை பார்த்த போது 20 வருடங்களுக்கு முன்பு தன்னையே பார்த்தது போல உணர…அவள் மனம் கலங்கியது…

"அனிதா… எவனோ நேத்து வந்தவனுக்காக அம்மாவையே… நம்ப மாட்டிங்குற… என்னம்மா பண்றது உன் வயசு அப்படி… உன் வயசுல நானும் இப்படித்தானே இருந்தே… இப்போ… " என்று பெருமூச்சு ஒன்றை செரிந்தாள்…

" அந்த பையனை கைது செஞ்சுட்டு போறத…நானே ஒரு தடவை பார்த்திருக்கேன்… சரிம்மா அதெல்லாம் விடு… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்…

  நீ எத்தனை தடவை என்கிட்ட..உங்கப்பா புகைப்படமோ, இல்ல அவர் சம்பந்தப்பட்ட ஏதாச்சும் கேள்விகளை கேட்டிருப்ப .. ஆனா நான் ஒரு நாள் கூட அதை பத்தி உன்கிட்ட பேசுனதில்லை.. இன்னிக்கு சொல்றேன்.. உங்கப்பன் ஒன்னும் சாகல .. அவன் என்னை விட்டுட்டு போய்ட்டான்.. என்று கூற அனிதாவின் கண்கள் விரிந்த படி அவள் அம்மாவை பார்த்தாள்...

    ஆமா அனிதா... அவன் என்னை ஏமாத்திட்டு போய்ட்டான்..தோ இதே மாதிரி தான் காதல் கத்திரிக்கான்னு உன் வயசுலதான் இவனை நம்பி வந்து இந்த நிலைமைல இருக்கிறேன்.. .

   இது என்னோட ஊரே இல்ல.. ஏன் ஊரு ஒரு சின்ன கிராமம்.. அம்மா, அப்பா, அண்ணன்னு எல்லாரும் இருந்தாங்க.. ஆன அவங்களை எல்லாம் என்னோட முட்டாள்தனத்தால தூக்கி போட்டு வந்துட்டேன்... 

   நான் 11, 12வகுப்பு படிக்க பக்கத்துல இருக்க டவுன் பள்ளி கூடத்துக்கு தான் போனும்.. அப்போ நான் மினி பஸ்ஸுல தா போவேன்... அங்கதான் அவனை நான் பார்த்தேன்.. நான் முதல்ல ஒதுங்கி , ஒதுங்கி தான் போனேன்.. ஆனா கொஞ்சம், கொஞ்சமா பேசி என் மனச மாத்திட்டான்..

   நானும் அப்போ உன்னை மாதிரி தான் அவன் தான் என் மேல உண்மையா அன்பு வச்சுருக்கான்.. ஏன் பெத்த அம்மா, அப்பாவை விட இவன் என்னை நல்லா பார்த்துப்பானு..நம்பினேன்... யாரோ சொல்லி வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு ... என்னை இப்படியெல்லாம் உட்கார வச்சு பேசிட்டுருக்கல.. என்னைய திட்டி, அடிச்சு வீட்டுக்குள்ளயே போட்டு அடைச்சாங்க..

  அப்போ என் மண்டைக்கு உரைக்கிற மாதிரி யாராச்சும் சொல்லிருந்தா.. இப்படியெல்லாம் நடக்காம இருந்திருக்குமோ என்னமோ.. எல்லாரும் எங்களை பிரிக்க பார்க்குறாங்க அப்படின்னு நினைச்சுட்டு அவனை வீட்டுகிட்டே வர சொல்லி நைட் ஓட நைட்டா.. ஓடி வந்துட்டே இங்கே..

  அவனும் அசலூர்ங்கரதனால எங்களை சுலபமா புடிக்க முடியல.. இங்க வந்து கல்யாணம் புது வாழ்க்கைலாம் ஆரம்பிச்சோம்.. என்னோட 19வது வயசுல.. **ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுன்னு சொல்லுவாங்களே** .. அது மாறிதான்.. மூணு மாசம் வரைக்கும் வீடு இல்லாட்டி என்ன.. சாப்பாடு இல்லாட்டி என்ன.. அதான் மனசுக்கு புடிச்சவன் இருக்கனேன்னு சந்தோஷமாதான் இருந்தே.. 

    ஆனா போக போக நிதர்சனம் புரிய ஆரம்பிச்சுது.. எனக்கு படிப்பில்லை, அவனுக்கு சரியான வேலையில்லை.. நான் அவனை ஏதாச்சும் கூலி வேலைக்காச்சும் போனு சொல்லுவே.. ஆனா அவன் வெட்டியா தான் இருந்தான்.. இதனால அடிக்கடி எனக்கும் அவனுக்கும் சண்டை வரும்.. 

   ஒரு நாள் சண்டை பெரிசாகி கோவுச்சுட்டு போனவன்தான்.. திரும்ப வரவே இல்லை.. நானும் எங்கெங்கேயோ தேடி பார்த்தேன்.. ஆனா ஒரு தகவலும் இல்லை.. சரி திரும்ப ஊருக்கு போய் பெத்தவங்க கால்ல விழுந்தரலாம்னு நினைச்சுட்டு இருந்தபோ வயித்துல நீ தங்குனது தெரிஞ்சுது... இந்த நிலைமையில அங்க போய் அவங்களையும் கஷ்டபடுத்த மனசு வரல... அப்போ நான் ஒரு வக்கீலம்மாட்ட வேலைக்கு போயிட்டுருந்தே.. அவங்க கிட்ட என் கதையை சொல்லவும் அவங்க தான் காவல் துறை கிட்ட தனிப்பட்ட முறையில சொல்லி அவனை தேட சொன்னாங்க..

   அவன் ஏதோ ஒரு ஊர்ல இருக்கான்னு தகவல் வந்துச்சு.. போய்ப் பார்த்தேன்.....(அவளின் வலி கண்ணீராக வெளியே வந்தது..).. அங்கே வேற ஒரு குடும்பம் குழந்தைங்கன்னு வாழ்ந்துட்டு இருந்தான்.. நான் போயி ஏன் என்னை ஏமாத்துனேன்னு கேட்டே.. ஆனா என்னால என்ன பண்ண முடியும்.. எங்க திருமணம் பதிவு கூட செய்யல.. அப்புறம் திரும்பவும் இங்க வந்தேன்..

   வாழ்க்கையே போச்சே.. இனி பெத்தவங்க கிட்டயும் திரும்பி போக முடியாது, நம்பி வந்தவனும் விட்டுட்டு போயிட்டான்.. இனி எதுக்காக வாழனும்னு நினைச்சு இங்கேதான் வந்தேன் .. என் வாழ்க்கைய முடிச்சிக்க... அப்போதான் என் வயித்துல நீ என்ன பாவம் பண்ண.. உன்னை ஏன் சாகடிக்கனும் உனக்காக வாழலாம்னு முடிவு பண்ணேன்.. 

      **இப்போவரைக்கும் எத்தனையோ கஷ்டம், அவமானம், ஏமாற்றம், துரோகம்னு எத்தனையோ பார்த்துட்டேன்..கண்ணு.. ஆனா இன்னும் நான் உயிரோட வாழறேன்னா.. அது உனக்காக மட்டும் தான்.. நான் கவுரவமா வாழனுன்னு நினைச்சாலும் இந்த சமூகம் என்னை எப்படி எல்லாம், பார்த்துச்சு, பேசுச்சுன்னு உனக்கு தெரியுமா... என் புள்ளைக்கும் அந்த நிலைமை வரக்கூடாதுன்னு தான் நீ என்னை பத்தி என்ன நினைச்சாலும் பரவாயில்லைனு உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டிருக்கேன்...**

** இப்போ சொல்லுடா கண்ணு இந்தம்மா உனக்கு கெட்டது நினைப்பேனா…?" என்று அவள் கண்ணீருடன் கேட்க… தன் தாயின் துயரங்களையும் ஏமாற்றங்களையும் கேட்டவள்… அவளை இறுக அணைத்து கொண்டு…**
"அம்மா மன்னிச்சுடும்மா… நான் தப்பு பண்ணிட்டேன்… இனி நான் இப்படி பண்ணமாட்டேன்… உனக்கு நல்ல புள்ளையா இருப்பேன் " என்று அனிதா தன் தாய்க்கு உறுதியளித்தாள்…!
அமுதா பின் அனிதாவிடம் "இந்த வயசுல நம்மதான் கண்ணு பார்த்து இருக்கனும்… விட்டில் பூச்சி இப்படித்தான் வெளிச்சம்னு நம்பி நெருப்புக்குள்ள போய் விழுந்து பொசுங்கிருமாம்… அது மாறிதான்… நாமளும் இந்த வயசுல வர்றது உண்மையான காதல்னு நம்பி , நம்ம வாழ்க்கைக்கான வெளிச்சம்னு நம்பி…கடைசியில தீபந்ததுக்குள்ள போய் விழுகறோம்…

   எல்லாம் நடக்க வேண்டிய வயசுல தான நடக்கும்.. நாம அந்தந்த வயசுல என்ன பண்ணனுமோ அதை சரியா செஞ்சாலே போதும்டா கண்ணு..நம்ம வாழ்க்கை அழகா பயணிக்கும்.. இப்போ உனக்கு படிக்கிற வயசு.. நல்லா படி என்ன.. எதை பத்தியும் கவலை படாதே.." என்று பொறுமையாக தன் வாழ்க்கையையே எடுத்துகாட்டாக கூறிய தாயை ஆழ்ந்த பார்வை பார்த்தவள்... இனி நன்றாக படித்து அவளுக்கு பெருமையை தேடித் தரும் பிள்ளையாக வாழ வேண்டும் என்று உறுதி கொண்டாள்...!!!...

   அனிதா.. அனிதா.. எந்திரிம்மா.. பள்ளிக்கூடத்துக்கு நேரமாகுத்துல.. பக்கத்து வீட்டு ராஜா எல்லாம் காலங்காத்தாலே எப்படி படிக்கிறான் தெரியுமா..?.. மணி 7 ஆக போகுது நீ இன்னும் தூங்குற.. எந்திரிடி.. 

   என்று படபடவென்று சமையல் வேலைகளை முடித்த படியே அவளிடம் அம்மாவான அமுதா போராடிக் கொண்டிருக்க , அந்த பெயருக்கு சொந்தக்காரியான அனிதாவோ நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்...

   அனிதா இன்னிக்கு நான் சீக்கிரமா கிளம்பனும்டி .. வேகமா எந்திரிச்சு தயாராகு.. அடுத்த வருஷம் பன்னிரெண்டாம் வகுப்பு போக போற.. ஆனா படிப்புல ஒரு அக்கறை இருக்கா பாரு.. என்னத்தை பண்ண போறியோ.. என்று புலம்பிக்கொண்டிருக்க..

   "அம்மா ஏம்மா காலங்காத்தாலேயே.. ஆரம்பிக்கிற , நான் எந்திருச்சுட்டேன்.. போதுமா... "

  "சரி .. சரி முதல்ல போய் குளி.. நான் போய் உனக்கு சாப்பாடு போட்டு வைக்கிறேன்.." 

“அம்மா என்ன விசேஷம்… அவங்க வீட்டுல… ?”

 "அது அவங்க மகளுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம்.. கூட மாட ஒத்தாசையா இருக்கனும்னு என்னை சீக்கிரமாவே வர சொன்னாங்க.."

 "ஒஹ்ஹ்.. சரி சரி.. வரப்போ நிறைய பலகாரம் கொண்டு வா.. " 

  " அதெல்லாம் அவங்க கொடுகிறப்போ பார்த்துலாம்.. நாமளா போய் அப்டிலா கேட்டு வாங்க கூடாதுடி.."

 "என்னமோ போம்மா.. நாம அதெல்லாம் இனி எப்போ சாப்பிடுவோம்.. அதான் சொன்னேன்.. சரி நான் போய் குளிக்கிறேன்.." என்று அவள் சென்று விட 

    அமுதா இருந்த இரண்டு தக்காளிகளை போட்டு .. சாதத்தில் கிளறி வேகமாக அவள் மகளின் டப்பாவில் அடைத்தவள் மீதமிருக்கும் சாதத்தை அவளுக்கு ஒரு டப்பாவில் அடைத்து , பின் அதையே காலை உணவாக தட்டில் போட்டு அவள் குளித்து முடித்து வருவதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தாள் ...

     அவள் வந்ததும் அவளுக்கும் தட்டில் சாதத்தை போட்டு ..அவள் சாப்பிட சாப்பிட அமுதா அவளுக்கு தலை வாரி விட்டாள்..

"அனிதா ..நான் எப்போவும் சொல்றதுதான் .. உன்னோட கவனம் படிப்புல மட்டும்தான் இருக்கனும்.. தேவையில்லாத விஷயத்துலலாம் மனசை அலைபாயவிடாத.. நீ நல்லா படிச்சு பெரிய ஆபிசரம்மாவா வரனும்.. சரியா.."

“போதும்மா இதோட எத்தனை தடவை இதை சொல்லிட்டே… என்னதான் படிச்சாலும் மண்டையில ஏறது தானே ஏறும்…” என்று சலிப்புடன் கூற…

“போட்டேனா…வை… ஒழுக்கமா நல்லா படிக்கிற வழிய பாரு… சரி … நேரமாச்சு வேகமா கிளம்பு… நான் முன்னாடியே போற… வர கொஞ்சம் லேட்டாகும்டி… பாத்து பத்திரமா இரு… கோமதி அக்காகிட்ட சாவி கொடுத்துட்டு போ…”

  என்று பரபரப்பாக கூறி விட்டு, வேகமாக நடையை கட்டினாள்.. 

   அமுதா.. வாழ்வில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்தவள்.. கணவன் இல்லை.. ஒரே பெண் குழந்தை அனிதா.. அனிதா தான் அவளுக்கு வாழ்வதற்கான ஒரே பிடிப்பு.. காரணம் எல்லாம்.. அவர்கள் வசிப்பது பெரு நகரம் என்று மார் தட்டிக்கொண்டு வெளியே பிரம்மாண்டம் வேஷம் போட்டுகொண்டு சுவருக்கு பின்னால் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கி, முடக்கி வைத்திருக்கும் பகுதி ஒன்றின் நெரிசலான சந்திற்குள் இரு அறைகள் கொண்ட ஒரு வீட்டில்தான்.. அமுதா அதிகம் படிக்கவில்லை 12வது , அதுவும் பாதி.. 

அவள் தன் தெருவிற்கு பின்னால் வசிக்கும் பணக்கார எஜமான்களின் வீடுகளுக்கு தினமும் வீட்டு வேலை செய்துதான் தன்னையும் தன் மகளையும்
காப்பாற்றுக்கிறாள்… அனிதா அருகில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்… அமுதாவின் கனவு எல்லாம் தன்னை போல தன் மகள் வாழ்க்கையில் தோற்றுவிடக்கூடாது… அவளுக்கு கல்வி , நல்ல வாழ்க்கை என்று அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான்…

  ஆனால் அனிதாவோ இது எதைபற்றியும் கவலைப் படவில்லை.. அமுதா தனக்காகத்தான் இவ்வளவு தூரம் கஷ்டபடுகிறாள் என்பது கூட அவளுக்கு புரியவில்லை.. ஏனென்றால் அவள் வயது அப்படி.. பருவ வயது.. அந்த வயதிற்கே உரிய ஆடைகளின் மேலும் , அலங்காரங்கள் மேலும் உள்ள ஈர்ப்பு, சினிமா எனும் மாயையில் உழன்று கதாநாயகன் போல ஒருவன் தனக்கு வருவான் என்று அந்த வயதிற்குரிய சுரப்பிகள் அவள் உடலில் நன்றாக வேலை செய்ய.. படிப்பின் மீதான கவனம் அவளுக்கு குறைந்து போனது..

கடமைக்கென்று பள்ளிக்கூடம் சென்றாள்…

  அங்குதான் பள்ளிக்கூட வாசலில் தினமும் ஒரு 23-24 வயதை ஒத்த இளைஞன் அவளை பார்ப்பதும் பேச முயற்சிப்பதுமாக இருந்தான்.. தினமும் இரு சக்கர வாகனத்தில் வருவான் , நல்ல ரோமியோ போல உடையணிந்து கொண்டு அவளிடம் தினமும் விலையுயர்ந்த மிட்டாய்களை கொடுத்து அவளிடம் காதல் மொழிகள் பேசுவான்.. முதலில் மிட்டாய்க்கு ஆசைப்பட்டு பேச.. பின் அவள் மனதிலும் அவன் கதாநாயகன் ஆகி போனான்..

  அமுதாவோ காலை 8 மணிக்கு சென்றால் இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புவாள்.. அவள் பாவம் தன் மகள் தினமும் பள்ளி கூடத்திற்கு செல்கிறாள் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறாள்.. ஆனால் அவளோ அந்த காதல் ரோமியோவின் , ஜூலியட்டாக பைக்கில் பறந்து கொண்டிருக்கிறாள்.. கடந்த ஒரு மாதமாக.. 

 இரவு 9 மணி.. லட்சுமி அக்காளின் வீட்டில் நிச்சயம் முடிந்து ஓடாக உழைத்து களைத்த முகத்துடன் தாமதமாக தான் வீடு வந்தாள்.. வந்ததும் பக்கத்து வாசலில் கோமதி அக்கா அமர்ந்திருக்கவும் அவரிடம் பேசினாள்..

“அக்கா அனிதா வந்துட்டாளா… ஏதாச்சும் சாப்பிட்டாளா…” என்று அக்கறையாக கேட்க அவரோ…

“அதெல்லாம் இப்போதான் அமுதா வந்தா, நீ வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி… எவனோ ஒருத்தன் பைக்கில கொண்டு வந்து விட்டான்… அவங்கிட்ட பல்ல பல்ல காமிச்சு பேசிட்டிருந்தா… நான் அவ பேச்சு சத்தம் கேட்டு சாவி கொடுக்க வெளியே வந்தப்போ தான் இந்த கூத்த எல்லாம் பார்த்தேன்… அதான் நீ தப்பா நினைச்சாலும் பரவாயில்லைனு உன்கிட்ட சொல்லிட்டேன்… இது என்னமோ சரியில்லைன்னு தோணுது பார்த்துகோ அமுதா…” என்று அவரின் ஆதங்கத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தினார்…

ஆனால் எந்த பெற்றவள் தான் தன் பிள்ளையை பற்றி கூறிய உடனே நம்பிவிடுகிறாள்… அமுதாவும் அப்படித்தான்…

“அக்கா ஏன் புள்ளைய பத்தி தப்பா பேசாத… அவ யாராச்சும் தெரிஞ்சவங்களா இருக்கும் அதான் நின்னு பேசிருப்பா… மத்தபடி அவ அப்படிலாம் பண்ற பொண்ணு இல்லக்கா …” என்று என்ன தான் தன் மகளை விட்டு கொடுக்காமல் பேசினாலும் அவளுக்கும் ஏதோ உறுத்தியது… அவளுக்கே இங்கு சொந்தமுமில்லை , பந்தமுமில்லை இதில் தெரிந்தவர்கள் ஏது?..
யோசனையுடனையே வீட்டிற்குள் சென்றாள்…

 கோமதியோ.. எனக்கென்ன ஏதோ நல்லது சொன்னா நம்மகிட்டேயே சண்டைக்கு வந்திருவா போலயே.. என்று புலம்பிக்கொண்டே தன் வேலைகளை கவனிக்க சென்றார்..

   அமுதா உள்ளே நுழைய ... தொலைகாட்சியில் காதல் பாட்டை ரசித்து கொண்டிருந்தவள்.. டப்பென்று ஆஃப் செய்து விட்டு படிப்பது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்..

“அனிதா… எத்தனை மணிக்குடி வந்தே.?.”

“நான் பள்ளிக்கூடம் முடிஞ்சதுமே வந்துட்டேம்மா 7 மணிக்கே…” என்று பொய்யுரைத்தாள் பெற்றவளிடம்…

 அவளை மேலும் கீழும் ஆராயும் பார்வை பார்த்தவள்.. சரி என்று விட்டு விட்டாள்..

“சரி சாப்பாடு எடுத்து வை … நான் போய் மூஞ்சி கழுவிட்டு வரேன்… ஒரே அசதியா இருக்கு…”

“இல்லம்மா எனக்கு பசியில்ல… எனக்கு எதுவும் வேண்டாம் நீ போட்டு சாப்ட்டுக்கோ… நான் படிச்சு படிச்சு tired ஆயிட்டேன்… போய் தூங்குறேன்…” என்று நழுவிவிட்டாள்…

“ஏண்டி பசியில்ல… என்ன வெளிய எங்காச்சும் சாப்டியா…?”

“ஆமா நீ கொடுக்கிற அஞ்சுக்கும் பத்துக்கும் பிரியாணியா போடுவாங்க… அதெல்லாம் ஒன்னு இல்ல… வயிறு சரியில்லை… நான் போய் தூங்குற…”

“பின்ன நான் என்ன கோடீஸ்வரியா… இலட்ச லட்சமா கொடுக்க… அதிகமா பேசாம போய் படு…” என்று அவளை அதட்டியவள் தன் மகள் தன்னிடம் ஏதோ மறைப்பது போல உணர்ந்தாள்…

   அவளை கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று அமைதியாகவே இருந்தாள்.. அவளிடம் இது பற்றி எதுவும் பேசவில்லை.. ஒரு வாரம் சென்றது..

  அமுதா ஒரு நாள் சீக்கிரமாகவே வந்துவிட்டாள்.. அனிதா இந்நேரம் வந்திருக்க வேண்டியவள் வரவில்லை.. அவளுக்காக வெளியே காத்திருந்தவள் அன்று கோமதி சொன்ன காட்சியை கண்கூடாகக் கண்டாள்.. அவளுக்கோ தூக்கி வாரி போட்டது.. இதற்கு சீக்கிரமே முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தாள்..

 அனிதா அவள் அம்மா தன்னை பார்த்ததை கவனிக்கவில்லை.. எப்போதும் போல வர வீடு திறந்திருப்பதை பார்த்தவள் பயத்தை மறைத்து கொண்டு எப்போதும் போல உள்ளே வந்தாள்..

“அனிதா… ஏன் இன்னிக்கு இவ்ளோ நேரம்?” என்று கேட்க…

“அம்மா இன்னிக்கு பள்ளி கூடத்துல சிறப்பு வகுப்பும்மா… அதான் லேட்டு…” என்று எந்த உறுத்தலும் இன்றி பொய்கூறி விட்டு அவள் பாட்டிற்கு சென்று உடை மாற்றிக் கொண்டிருக்க… அமுதாவிற்கு சுருக்கென்றது… தன் மகள் தன்னிடம் எவனோ ஒருவனிற்காக பொய் சொல்லுவது அவளுக்கு வலித்தது…

    அவளிடம் ஏதும் பேசவில்லை.. அமைதியாக சாப்பிட்டு உறங்கினர்..

    காலை அவள் வேலைக்கு போக வில்லை .. அவளை கேள்வியுடன் பார்த்த அனிதாவிடம் ..

  "இன்னக்கி நீயும் பள்ளி கூடத்துக்கு லீவு சொல்லிடு நம்ம வெளிய போறோம்.. " என்று அவளின் மொத்த கேள்விகளுக்கும் ஒரே தொடரில் பதிலை முடித்தாள் அமுதா..

 "எங்கம்மா போறோம்.. அதுவும் சும்மாவே நீ எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டே... எங்க போறோம்.. ஹாஸ்பிடலுக்கா? .. உனக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா. ?"

"இல்லை அங்கெல்லாம் இல்ல.. நாம வேற இடத்துக்கு போறோம்.. உனக்கு புடிச்ச இடத்துக்கு.."

"எனக்கு புடிச்ச இடமா… என்னவா இருக்கும் "என்று யோசித்தவள்… எதுவா இருந்தா என்ன… தனக்கு பிடித்த இடம் தானே , அதுவும் பள்ளிக்கு வேறு இன்று முழுக்கு போட்டாயிற்று பிறகென்ன என்று வேகவேகமாக கிளம்பி வந்தாள்…

  இருவரும் கிளம்பி டவுன் பஸ் பிடித்து அரை மணி நேர பயணத்தில் அங்கிருந்த கடற்கரை ஒன்றிற்கு வந்தடைந்தனர்..

  அங்கு வந்து ஒரு நிழலாக ஓரிடத்தில் அமர்ந்தனர்..இருவரும் ... பின் அமுதா அங்கு விற்றுக்கொண்டு வந்த சுண்டல் பொட்டலம் ஒன்றை வாங்கியவள் அனிதாவை முதலில் சாப்பிட சொன்னாள்.. அவளும் கடற்கரைக்கு வந்த குஷியில் அமைதியாக சாப்பிட்டாள்.. அமுதாவோ அந்த நிசப்தமான சமுத்திரத்தையும் அங்கு மெல்ல மெல்ல மழலையின் ஸ்பரிசம் நம்மை தீண்டுவது போல கரையை தீண்டிய அலையையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவள் அதற்குள் சாப்பிட்டு முடிக்க.. 

“அனிதா… யாரு அந்த பையன்…?” என்று தன் கேள்வியாய் முன் வைத்தாள்…

“அம்மா…அது வந்து…அது… யாரும்மா. எந்த பையன்…” என்று மழுப்ப…

“என்கிட்ட எதையும் மறைக்காத அனிதா … எனக்கு எல்லா விஷயமும் தெரியும்…” என்று கூற…

"அம்மா அது வந்து அவன் நல்ல பையம்மா… நானும் அவனும்… காதலி…க்கிறோம்… " என்று மென்று விழுங்கி கூறி முடித்தாள்…

“ஒஹ்ஹ்… அவன் ரொம்ப நல்ல பையன்… சரிம்மா வேற என்னெல்லாம் தெரியும் அவரை பத்தி…”

“அம்மா…அது… அவன் பி.காம்… படிச்சிட்டு வேலையில்லாம இருக்கான்… அவன் படிப்புக்கேத்த வேலை கிடைச்சா போய்டுவான்ம்மா… அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லம்மா…நல்ல பையன்…”

"ஆமா அனிதா… இதெல்லாம் அவன் உன்கிட்ட சொன்னது… உனக்கு அவனை பத்தி முழுசா தெரியாது… அவன் படிப்பை பாதியிலேயே விட்டுட்டு… சேர்க்கை சரியிலாம போய் கஞ்சா , அது இதுன்னு வித்திட்டு இருக்கான்… அது தெரியுமா உனக்கு… "

அவளின் அம்மாவின் பேச்சை நம்ப மறுத்தவள்…

“அம்மா…நான் உன்னை நம்ப மாட்டேன்…நீ எங்கள பிரிக்குறதுக்காக என்னென்னமோ சொல்லுற… அவன் நல்லவம்மா… எங்களை பிரிச்சுடாதே…” என்று அழுதுகொண்டே கூறிய மகளை பார்த்த போது 20 வருடங்களுக்கு முன்பு தன்னையே பார்த்தது போல உணர…அவள் மனம் கலங்கியது…

"அனிதா… எவனோ நேத்து வந்தவனுக்காக அம்மாவையே… நம்ப மாட்டிங்குற… என்னம்மா பண்றது உன் வயசு அப்படி… உன் வயசுல நானும் இப்படித்தானே இருந்தே… இப்போ… " என்று பெருமூச்சு ஒன்றை செரிந்தாள்…

" அந்த பையனை கைது செஞ்சுட்டு போறத…நானே ஒரு தடவை பார்த்திருக்கேன்… சரிம்மா அதெல்லாம் விடு… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்…

  நீ எத்தனை தடவை என்கிட்ட..உங்கப்பா புகைப்படமோ, இல்ல அவர் சம்பந்தப்பட்ட ஏதாச்சும் கேள்விகளை கேட்டிருப்ப .. ஆனா நான் ஒரு நாள் கூட அதை பத்தி உன்கிட்ட பேசுனதில்லை.. இன்னிக்கு சொல்றேன்.. உங்கப்பன் ஒன்னும் சாகல .. அவன் என்னை விட்டுட்டு போய்ட்டான்.. என்று கூற அனிதாவின் கண்கள் விரிந்த படி அவள் அம்மாவை பார்த்தாள்...

    ஆமா அனிதா... அவன் என்னை ஏமாத்திட்டு போய்ட்டான்..தோ இதே மாதிரி தான் காதல் கத்திரிக்கான்னு உன் வயசுலதான் இவனை நம்பி வந்து இந்த நிலைமைல இருக்கிறேன்.. .

   இது என்னோட ஊரே இல்ல.. ஏன் ஊரு ஒரு சின்ன கிராமம்.. அம்மா, அப்பா, அண்ணன்னு எல்லாரும் இருந்தாங்க.. ஆன அவங்களை எல்லாம் என்னோட முட்டாள்தனத்தால தூக்கி போட்டு வந்துட்டேன்... 

   நான் 11, 12வகுப்பு படிக்க பக்கத்துல இருக்க டவுன் பள்ளி கூடத்துக்கு தான் போனும்.. அப்போ நான் மினி பஸ்ஸுல தா போவேன்... அங்கதான் அவனை நான் பார்த்தேன்.. நான் முதல்ல ஒதுங்கி , ஒதுங்கி தான் போனேன்.. ஆனா கொஞ்சம், கொஞ்சமா பேசி என் மனச மாத்திட்டான்..

   நானும் அப்போ உன்னை மாதிரி தான் அவன் தான் என் மேல உண்மையா அன்பு வச்சுருக்கான்.. ஏன் பெத்த அம்மா, அப்பாவை விட இவன் என்னை நல்லா பார்த்துப்பானு..நம்பினேன்... யாரோ சொல்லி வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு ... என்னை இப்படியெல்லாம் உட்கார வச்சு பேசிட்டுருக்கல.. என்னைய திட்டி, அடிச்சு வீட்டுக்குள்ளயே போட்டு அடைச்சாங்க..

  அப்போ என் மண்டைக்கு உரைக்கிற மாதிரி யாராச்சும் சொல்லிருந்தா.. இப்படியெல்லாம் நடக்காம இருந்திருக்குமோ என்னமோ.. எல்லாரும் எங்களை பிரிக்க பார்க்குறாங்க அப்படின்னு நினைச்சுட்டு அவனை வீட்டுகிட்டே வர சொல்லி நைட் ஓட நைட்டா.. ஓடி வந்துட்டே இங்கே..

  அவனும் அசலூர்ங்கரதனால எங்களை சுலபமா புடிக்க முடியல.. இங்க வந்து கல்யாணம் புது வாழ்க்கைலாம் ஆரம்பிச்சோம்.. என்னோட 19வது வயசுல.. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுன்னு சொல்லுவாங்களே .. அது மாறிதான்.. மூணு மாசம் வரைக்கும் வீடு இல்லாட்டி என்ன.. சாப்பாடு இல்லாட்டி என்ன.. அதான் மனசுக்கு புடிச்சவன் இருக்கனேன்னு சந்தோஷமாதான் இருந்தே.. 

    ஆனா போக போக நிதர்சனம் புரிய ஆரம்பிச்சுது.. எனக்கு படிப்பில்லை, அவனுக்கு சரியான வேலையில்லை.. நான் அவனை ஏதாச்சும் கூலி வேலைக்காச்சும் போனு சொல்லுவே.. ஆனா அவன் வெட்டியா தான் இருந்தான்.. இதனால அடிக்கடி எனக்கும் அவனுக்கும் சண்டை வரும்.. 

   ஒரு நாள் சண்டை பெரிசாகி கோவுச்சுட்டு போனவன்தான்.. திரும்ப வரவே இல்லை.. நானும் எங்கெங்கேயோ தேடி பார்த்தேன்.. ஆனா ஒரு தகவலும் இல்லை.. சரி திரும்ப ஊருக்கு போய் பெத்தவங்க கால்ல விழுந்தரலாம்னு நினைச்சுட்டு இருந்தபோ வயித்துல நீ தங்குனது தெரிஞ்சுது... இந்த நிலைமையில அங்க போய் அவங்களையும் கஷ்டபடுத்த மனசு வரல... அப்போ நான் ஒரு வக்கீலம்மாட்ட வேலைக்கு போயிட்டுருந்தே.. அவங்க கிட்ட என் கதையை சொல்லவும் அவங்க தான் காவல் துறை கிட்ட தனிப்பட்ட முறையில சொல்லி அவனை தேட சொன்னாங்க..

   அவன் ஏதோ ஒரு ஊர்ல இருக்கான்னு தகவல் வந்துச்சு.. போய்ப் பார்த்தேன்.....(அவளின் வலி கண்ணீராக வெளியே வந்தது..).. அங்கே வேற ஒரு குடும்பம் குழந்தைங்கன்னு வாழ்ந்துட்டு இருந்தான்.. நான் போயி ஏன் என்னை ஏமாத்துனேன்னு கேட்டே.. ஆனா என்னால என்ன பண்ண முடியும்.. எங்க திருமணம் பதிவு கூட செய்யல.. அப்புறம் திரும்பவும் இங்க வந்தேன்..

   வாழ்க்கையே போச்சே.. இனி பெத்தவங்க கிட்டயும் திரும்பி போக முடியாது, நம்பி வந்தவனும் விட்டுட்டு போயிட்டான்.. இனி எதுக்காக வாழனும்னு நினைச்சு இங்கேதான் வந்தேன் .. என் வாழ்க்கைய முடிச்சிக்க... அப்போதான் என் வயித்துல நீ என்ன பாவம் பண்ண.. உன்னை ஏன் சாகடிக்கனும் உனக்காக வாழலாம்னு முடிவு பண்ணேன்.. 

      இப்போவரைக்கும் எத்தனையோ கஷ்டம், அவமானம், ஏமாற்றம், துரோகம்னு எத்தனையோ பார்த்துட்டேன்..கண்ணு.. ஆனா இன்னும் நான் உயிரோட வாழறேன்னா.. அது உனக்காக மட்டும் தான்.. நான் கவுரவமா வாழனுன்னு நினைச்சாலும் இந்த சமூகம் என்னை எப்படி எல்லாம், பார்த்துச்சு, பேசுச்சுன்னு உனக்கு தெரியுமா... என் புள்ளைக்கும் அந்த நிலைமை வரக்கூடாதுன்னு தான் நீ என்னை பத்தி என்ன நினைச்சாலும் பரவாயில்லைனு உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டிருக்கேன்...

   இப்போ சொல்லுடா கண்ணு இந்தம்மா உனக்கு கெட்டது நினைப்பேனா..?" என்று அவள் கண்ணீருடன் கேட்க.. தன் தாயின் துயரங்களையும் ஏமாற்றங்களையும் கேட்டவள்.. அவளை இறுக அணைத்து கொண்டு..

"அம்மா மன்னிச்சுடும்மா… நான் தப்பு பண்ணிட்டேன்… இனி நான் இப்படி பண்ணமாட்டேன்… உனக்கு நல்ல புள்ளையா இருப்பேன் " என்று அனிதா தன் தாய்க்கு உறுதியளித்தாள்…

 அமுதா பின் அனிதாவிடம் "இந்த வயசுல நம்மதான் கண்ணு பார்த்து இருக்கனும்.. விட்டில் பூச்சி இப்படித்தான் வெளிச்சம்னு நம்பி நெருப்புக்குள்ள போய் விழுந்து பொசுங்கிருமாம்.. அது மாறிதான்.. நாமளும் இந்த வயசுல வர்றது உண்மையான காதல்னு நம்பி , நம்ம வாழ்க்கைக்கான வெளிச்சம்னு நம்பி..கடைசியில தீபந்ததுக்குள்ள போய் விழுகறோம்.. 