வானம் விரிந்து கிடக்கிறது
பூமி பரந்து கிடக்கிறது…
யாவரும் தூக்கி எறியும்
குப்பைக் காகிதம் தானே
அங்கு ஒருவரின் வாழ்வாதாரமாக உள்ளது?
அஸ்தமிக்கும் சூரியன்
அத்தோடு ஒழிந்துவிட்டதாக அர்த்தமில்லை!
அதிக உஷ்ணத்தோடு தாக்க எடுத்துக்கொள்ளும் ஓய்வுநேரம் அது!!
உன்னை அவமானம் கொள்ள வைக்கும் கேள்விக்குறியர்களுக்கு முன்,
ஓர் ஆச்சரியக்குறியாய்
நிமிர்ந்து நில்!!
முற்றுப்புள்ளி என்ற வார்த்தைக்கும் அப்பால்
மூன்று புள்ளி வைத்தால்???
தோல்வி கண்டு துவளாதே…
முயற்சி கொண்டு முன்னேற
எழுந்து வா நண்பனே…
எழுந்து வா…