Community

தீரா அத்தியாயம்

தீரா அத்தியாயம்

வாகனங்கள் இயங்கிட எரிபொருள் எவ்வாறோ, அவ்வாறு அன்பும் நம் வாழ்க்கையில் என்றும் தீராத எரிபொருளாக.

பணம் பொருள் இவைகளெல்லாம் வாகனத்தை அழகுபடுத்தும் உதிரிபாகங்கள் போன்றதே.

பணம் பொருள் புகழ் இவற்றை கொண்டு மட்டுமே முழு மன மகிழ்வோடு வாழ முடியும், என்றால் நிச்சயமாக எல்லாரும் முடியாத ஒன்றுதான்.

பணம் இல்லாமல் வாழ்வது சாத்தியமா?

பணம் இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை. ஆனால் பணத்திற்காக மட்டுமே வாழ்பவர்களாக நீங்கள் உங்களுக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

நான் கதிரவன்.நடுத்தரக் குடும்பம். அப்பா கூலி வேலை செய்கிறார். அம்மா விவசாய வேலைகளான, களை எடுத்தல், பயிர் நடுதல் போன்ற வேலைகளை செய்வாள். தம்பி பதினோராம் வகுப்பு படிக்கிறான்.

கல்லூரியிலிருந்து தேர்வு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தேன். பத்து நாட்கள் விடுமுறை இன்பமாக கழிக்கலாம் என்றே வந்தேன். ஆனால் அம்மாவும் நான் எதை செய்தாலும் என்னை குறை கூறிக் கொண்டே இருந்தாள். இரவில் உறங்க 12 மணி காலையில் சூரியன் உச்சியில் நிற்கும் வேளையில் எழுதுவது என்றால் சும்மாவா விடுவாங்க.

அப்பா அன்று தாமதமாக வீட்டிற்கு வந்தார். சம்பள பணத்தை வாங்கி விட்டீர்களா என்று அம்மா கேட்டாள். ஆம், என்று தன் ஒரு பக்கம் பாதி கிழிந்த பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினார், அப்பா.

கடகடவென எண்ணிப் பார்த்துவிட்டு இதில் 700 ரூபாய் தான் உள்ளது என்றாள், அம்மா.

“லோடும் கம்மி, மூட்டையும் கம்மி தான்” என சொன்னார் அப்பா.

இதை வைத்து எப்படி குழுவில் பணம் கட்ட முடியும், இன்னும் 300 ரூபாய் தேவைப்படுகிறது என் அம்மா வாதிட்டாள்.

“பக்கத்து தெரு பரிமளம் பாட்டி கூட இந்த 62 வயசுலயும் வார கூலியா ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பாதிக்கிறாள், உன்னால ஒரு ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க முடியலயா” என்று கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் அம்மா.

பரிமளம் பாட்டியை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்தது. பக்கத்து வீட்டில் இருந்தாலும் பாட்டியை காண இயலாது. ஏனென்றால் இந்த வயதிலும் பாட்டி படு சுட்டியாக வேலை செய்வாள்.

பரிமளம் பாட்டிக்கு ஒரே பையன் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவருக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். வேலை இடம் சென்னை என்பதால் பெரும்பாலும் அவர் இங்கு வரமாட்டார்.

பரிமளம் பாட்டியின் கணவர் செவலை அவர் வீட்டிலே இருப்பார். வயது முதிர்ச்சியால் வேலைக்கு செல்வதில்லை.

பரிமளம் பாட்டி செய்யாத வேலைகளே இல்லை களை எடுப்பாள், நன்றாக சமைப்பாள், பயிர் நடுவாள், கரும்பு வெட்ட செல்வாள் இன்னும் பல வேலைகளை செய்வாள்.

ஒரு முறை களையெடுக்க எங்கள் வயலுக்கு வந்திருந்த போது நான் பரிமளம் பாட்டியிடம் கேட்டேன் “இவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிச்சு செலவு பண்ணாம சேர்த்து வச்சி என்ன பண்றீங்க” என்று.

சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு கோவில் கோவிலாக சென்று வருவோம். மீதி இருந்தால் குழந்தைகள் காப்பகத்தை போன்ற நலச்சங்கங்களுக்கு அளித்துவிடுவோம் என்றாள்.

இனி வேலை செய்து பொருளீட்டி மீண்டும் கோவில் சென்று,மீதி இருக்கும் பணத்தை காப்பகத்திற்கு அளித்துவிடுவேன் என்றாள். பரிமளம் பாட்டி.

“சம்பாதித்த எல்லாத்தையும் செலவு பண்ணிட்டு இருந்தா நீ கடக்கயில யாரு உனக்கு காசு கொண்டு வந்து தருவார்” என கேட்டேன்.

பாட்டி சிரித்துக்கொண்டே சொன்னாள்

“சாகும்போது என்னதையா கொண்டு போகப்போறான்”.

"நான் கோயிலுக்கு போவது தான் உனக்கு தெரியும். அங்க போய் நான் வெளியில இருக்குற பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்து விட்டு வந்துடுவேன்.

காப்பகததிற்கு போனாலே பரிமலம் பாட்டி வந்துடுச்சினு என்னை சுத்தி அவ்வளவு புள்ளைங்க நிக்கும்" என சொன்னாள்.

பரிமளம் பாட்டி சொல்லும் போது அவளின் கண்ணை பார்த்தேன்.

அப்போது தான் நான் முதன் முதலாக அக மகிழ்வென்றால், என்ன என்று நேரில் கண்டேன்.

நிச்சயமாக பாட்டியின் முழு மன மகிழ்ச்சிக்கு இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திடுவாள் என அன்று எனக்கு தோன்றியது.

அன்று முடிவு செய்தேன் மனித வாழ்வில் என்றும் தீரா அத்தியாயம் அன்பு ஒன்று தான் என்று.

       -  தமிழ் கார்த்தி

தமிழ்மணி ம
Perambalur
இ- மெயில்: thamizhkarthi20117@gmail.com

1 Like