அடித்தால் வலிக்கும் என்று வளர்ந்த
அப்பனின் மகள் இன்று
அயோக்கியர்களால் அனாதை பிணமாக தூக்கியெறியப்பட்டாளே??
வலிதாங்க முடியா நிலையில் அம்மா என்றழைத்தாளோ??
அப்பா என்றழைத்தாளோ??
இல்லை
அண்ணா என்னை விட்டுவிடு என்றழைத்தாளோ??
அவமானம் அர்த்தம் அறியா வயதில்
அவள் மானம் எடுத்தாயே!
சென்றது அவள் மானம் இல்லை ஆணினத்தின் மானமடா!!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றால்
கருகியது குழந்தையா? தெய்வமா??
கதறியது குழந்தையா?தெய்வமா??
மண்ணில் புதைக்கப்பட்டது விதையல்ல!
மலர வேண்டிய மொட்டு!
பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லையாம்!
இல்லை! இல்லை!
பெண் குழந்தைக்கும் கூட பாதுகாப்பு இல்லையடா!
அப்பனின் ஆஸ்தி கரைக்கப்படவும்கூட இல்லை
கருக்கப்பட்டது கயவர்களால்!!
காற்றில் கலந்தது அவள் மட்டும் அல்ல
அவள் கனவுகளும்!
கல்நெஞ்சக்காரர்களே!!
அவளை பெண்னென்று நினைத்தாயோ???
அவள் பெண் குழந்தையடா!!
ஆடை இல்லாமல் இருப்பது சரியா? தவறா?
என்றறியாத வயதில்
இளந்தளிரை பறித்த அயோக்கியனே!
உன் ஆண்மையும் ஒரு பெண்ணால் வந்ததென்பதை மறந்தாயோ?
அயோக்கியனே உன் ஆண்மையின் ஆணுறுப்பை அறுத்தெறிந்தால் அடங்கிவிடுவாயா???
படைப்பு
அர்ச்சனா ராஜதுரை