Community

எங்கே செல்கிறது, கண்ணீரின் பயணம்?

"எங்கே செல்கிறது, கண்ணீரின் பயணம்? "

வீதிகளில், வண்டிகள் வேக வேகமாக சென்று கொண்டிருந்தது. அவ்வீதியில், ஒரு அகன்ற வீட்டில் மளிகை கடை கற்பகம் தனது மகன் மற்றும் மகனின் மனைவி, குழந்தைகளை வெளிநாட்டுக்கு செல்ல தேவையான பணத்தையும், ஆசியும் தந்து வழி அனுப்பி கொண்டிருந்தாள்.அவ்வழியே சென்ற கமலம்,திடீரென மளிகை கடை கற்பகத்தை கண்டும் காணாமலும் தலையை ஒரே பக்கமாக திருப்பிக் கொண்டு நடந்து சென்றாள். கமலத்தை கண்ட மளிகை கடை கற்பகம்,“மீண்டும் வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் குடித்து விட்டு வா…” என தனது மகனிடம் கூறினாள்.இவ்வாறு கமலத்தை வெறுக்கும் மளிகை கடை கற்பகம், ஒரே ஒரு நாள் தன்னுடன் கமலம் பேசவில்லை என்று கமலம் வீட்டிற்கே சென்று உரிமையுடன் கமலத்திடம் சண்டையிட்டவள்.ஆனால், இப்போது கமலத்தைப் பார்த்தாலே வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள்.

“அப்பா!அப்பா! அக்கா அழுகிறாள், தலைவலியாம்…” என கமலத்தின் இரண்டாம் மகள் கல்பனா கூறிக் கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள். கமலத்தின் கணவர் மாணிக்கம், “என்னமா, ரொம்ப வலிக்கிறதா?”, மருத்துவமனை செல்லலாமா?" என வினாவிக் கொண்டே, "எங்கே போனாள் அவள்?"என்று தனது மனைவி கமலத்தின் மீது கோபக் குரலில் கத்தினார். “அக்காவுக்கு தலைவலி மருந்து வாங்க அனுப்பினேன்” என கல்பனா கூறினாள். “இதோ அம்மா வந்துடாங்க” என கமலத்தின் மகன் ஆறுமுகம் கூறினான்.

கமலம், “நீங்க போயிட்டு வாங்க, நாங்கள் (கமலம், கல்பனா, ஆறுமுகம்) வீட்டிலேயே இருக்கிறோம்” என்று கூறி, தனது கணவனையும், மூத்த மகள் மலரையும் மருமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள்.

ஏழு மாதத்திலேயே பிறந்த, கமலத்தின் மகன் ஆறுமுகம், பிறப்பிலிருந்தே மாற்றுத் திறனாளியாக (நடக்க இயலாமை) வாழ்ந்து வருகிறார்.அவனை எண்ணி வேதனை அடையும் கமலம், அடிக்கடி அழுவதுண்டு.இருப்பினும், தனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும், அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குகின்றார்கள் .எனவே, அவர்கள் தனது மகனை எதிர் காலத்தில் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் எனவும் பெருமை கொள்வாள்.இப்போது, தனது இரண்டு மகள்களையும் நினைத்தும், கணவனின் கேள்விக்கு பதிலின்றி அழுகிறாள்.

இவ்வாறு மனத்திற்குள்ளே நொடிக்கு நொடி அழும் கமலம், அக்காலத்திலே எஸ்.எஸ்.எல்.சி வரை படித்து உள்ளாள். குடும்பத்தின் ஏழ்மை நிலையினால் மாணிக்கத்தை திருமணம் செய்து, தனது ஊரிலேயே வீட்டு வேலை செய்து வந்தாள்.தான் வீட்டு வேலை செய்யும் இடத்திற்கெல்லாம் கமலம், தனது 2 மகள்களையும் அழைத்து செல்வதுண்டு. இவ்வாறு மளிகை கடை கற்பகம் வீட்டிலும் வேலை செய்து வந்தாள்.கற்பகம் குறைந்த ஊதியமே கமலத்திற்கு வழங்குவாள். இருப்பினும், கமலமும், கற்பகமும் நெருங்கிய தோழிகள்.மளிகை கடை கற்பகத்திற்கு 3 மகன்கள், மூத்த அண்ணன் காவல்துறை அதிகாரி,இளைய அண்ணன் வக்கீல்.

“அம்மா! அம்மா! அப்பாவும், அக்காவும் மருத்துவமனையில் இருந்து வந்துட்டாங்க”…என்று மீண்டும் கமலத்தின் இளைய மகள் கல்பனா மெல்லிய குரலில் கூறினாள். “என்ன சொன்னார், மருத்துவர்? " என்றாள், கமலம். " தலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை”. இருப்பினும், "அதிகம் யோசிக்கக் கூடாது என அறிவுரை வழங்கினார் " என்றார் மாணிக்கம். மாணிக்கத்தின் குரலில் ஏதோ இருப்பது போல, கமலத்திற்கு தோன்றியது.

“உன்னால் தான் பிரச்சினை …நீ , ஏன் கூறினாய்?” என மலர் , கல்பனாவிடம் சண்டையிட்டாள். அதுவரை மனத்திற்குள்ளே அழுத மலர், தனது தங்கையிடம் வாய்விட்டு அழுதாள்.

அன்பாகவும், அறிவாகவும், அழகாகவும் இருக்கும், தனது குழந்தைகளை “இப்படிச் செய்து விட்டார்கள்” என கமலமும், கமலத்தின் கணவர் மாணிக்கமும் அழுவதுண்டு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் “குழந்தை பாலியல் வன்கொடுமைகளை” பற்றி அறிந்த கல்பனா, “தனது 4 வயத்தில் இவ்வாறு தன்னையும் இணங்க வைத்தனர்” எனக் கூறி, தமக்கை மலரிடம் கதறினாள்.மலரும் , “தன்னையும் அவ்வாறு இணங்கக் கூறி துன்புறுத்தினார்கள்” என்று கூறி அழுதாள். அவற்றைப் பற்றி “யோசித்தால் ,தனக்கு இப்பொதும் தலைவலிக்கும்” என்று கூறி அழுதாள் மலர்.

இக்கொடுமையைச் செய்த மளிகை கடை கற்பகம் வீட்டிற்கும், மகன்களுக்கும் நாயைப் போல் உழைக்கும் தனது தாயிடம், தனக்கும், தமக்கைக்கும் நடந்த கொடுமைகளை பற்றி 15வது வயதில் கூறினாள், கல்பனா. இவற்றை கேட்ட கமலம், மயங்கி கீழே விழுந்தாள்.

" தனது குழந்தைகளின் வாழ்க்கையை அழித்த, அப்பாவிகளின் வீட்டில் இவ்வளவு நாட்கள் நாயை போல உழைத்தோமே…" என கூறி அழுது கதறினார்.

மறுநாள் காலையில், கமலத்திடம் வழக்கம் போல பேச வந்தாள்,மளிகை கடை கற்பகம். ஆனால், கமலம் பேச வில்லை, இரவு முழுவதும் அழுத கமலத்தின் கண்கள் பேசியது.பின், "ஏன் இவ்வாறு , தனது குழந்தைகளை செய்தீர்கள்? என வினாவியப் போது, "இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை… மேலும், "உனது மகள்களுக்கு பள்ளியில் வேறு மாணவனுடன் ஏதாவது தொடர்பு இருக்கும் …"என்றாள் மளிகை கடை ,கற்பகம்.உடனே, “சத்தியமாக இல்லை , எனது குழந்தைகள் அவ்வாறு தவறானவர்கள் இல்லை” என்றார்,கமலம். “நான் பெரிய இடம், மூத்த அண்ணன் காவல்துறையினர்,இளைய அண்ணன் வக்கீல்,மேலும், மூன்றும் மகன்களே,நினைவிருக்கட்டும் !!!” என்று கூறி அவ்விடம் விட்டு சென்றாள், மளிகை கடை கற்பகம். அன்றிலிருந்து கமலம், கற்பகத்திடம் பேசுவதும் இல்லை, பார்வை கொண்டு பார்ப்பதும் இல்லை.

"தனது மகள்களை பாதுகாக்க தவறினேன்…! "நம்பிக்கையால் தான் கற்பகம் வீட்டிற்கு அழைத்து சென்றேன்…! "10 வருடத்திற்கு முன்பே, நீங்கள் என்னிடம் கூறி இருக்க வேண்டும்!!!, எனவும் குழந்தைகளிடம் கூறுவாள், இருப்பினும், "மளிகை கடை கற்பகம், தனது மகள்களை மிரட்டி இருப்பதை’ எண்ணி ,எண்ணி துடிப்பாள்!! …கணவனின் கண்ணீருக்கும் ,கேள்விக்கும் விடையின்றி தினந்தோறும் இரவு நேரங்களில் கண்ணீருடன் துடிப்பாள்!!..பெற்றோர்களின் நிலைமையைக் கண்டு , பிள்ளைகளும் கண்ணீர் கடலை உருவாக்குவது உண்டு!!!

இருப்பினும், “தனது குழந்தைகள் சிறந்தவர்களாக வருவார்கள் !!!..என்ற எண்ணத்தில் கண்ணீருடன் பயணித்துக் கொண்டிருக்கிறாள் !!!..”

“காமவெறினால், ஒரு பெண் குழந்தை பாதிக்கப்பட்டது” என்று கருதுகிறோம்.ஆனால், உண்மையில் பாதிக்கப்பட்டது ஒரு பெண் குழந்தை மட்டும் அல்ல, அக்குழந்தையின் குடும்பமே!!! பாதிப்பிற்கு உள்ளாக்கியவர்கள் , இன்றைக்கு அனைத்து செல்வத்தையும் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்! இத்தகைய பிரச்சினை, எப்போது முழுமையாக இல்லாமல் இருக்கிறதோ, அப்போது தான், இந்நாடு வல்லரசு நாடாக மாறும்.இல்லையெனில், ஒவ்வொரு பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களின் கண்ணீருடன் போதும் இந்நாட்டை அழிக்க!!!

By,
K.REENA,
B.Sc(Physics),2nd year,
Queen Mary’s college,
Chennai .
Cell: 9025259211 / 6385358538
Mail: kreenakreena068@gmail.com / reenak2205@gmail.com.

7 Likes

Nice short story. Congratulations ma

Katturai Pol enaku thondrukiradhu…payanpaduthiya sorkalai adhigam payan paduthi ulleer… vaazhthukal