பத்து மாதம் கருவறையில் சுமப்பவள் மட்டும் இல்லை பெண் என்பவள்… !
பெண் பிள்ளைகள் பெற்றால் கள்ளிப்பால் கொடுத்து கொன்றது சில காலம்…
பெண் பிள்ளைகள் மகாலட்சுமி என்றது சில காலம்… !
ஒரு பெண் கடவுளிடம் வரமாய் கேட்கும் ஒரு சிறிய கற்பனையே:
பிறக்கும் அந்த நொடி யோசித்து பார்த்தேன்… எவ்வளவு சந்தோசம் எனது பெற்றோரின் முகத்தில் !
விவரம் தெரிந்து அம்மா என்று அழைத்து ஒரு தாயின் மனதை சந்தோசப்படுத்தினேன் !
அப்பா என்று அழைத்து பாதுகாப்பை புரிந்துகொண்டேன்…
ஐந்து வயதின் மழலை பேச்சு பேசுனேன்
பூத்து குலுங்கும் பூவை போல சந்தோசமாய் கடந்த தருணங்கள்…
சின்ன சின்ன ஆசைகள்
வெகுதூரம் செல்ல வேண்டும் என்ற கனவுகள்… ஆனால் பெண் படித்து என்ன செய்ய போகிறாள் என்று கூறினது சில காலம்…
கஷ்டங்கள் என்னும் பாதையில்
படகாய் கடந்து சென்று
வெற்றியின் பாதையில் பயணிக்க முடிவு செய்தேன்… ஆனால் என்னால் முயற்சி செய்து பார்க்க கூட தகுதி இல்லாமல் நாட்கள் சென்றது… வெறும் கனவுகளில் மட்டுமே வாழ்கை சென்று கொண்டிருக்கிறது…
சில காலம் கடந்தது… !
என் உடலில் எதோ ஒரு மாற்றத்தை உணர்தேன் ! சொல்ல முடியாத வார்த்தைகளால் மௌனமாய் அமர்தேன் !
என்ன என்று அம்மாவிடம் கேட்டேன் அவள் சொன்னது… இவ்வளவு காலம் குழந்தையாய் விளையாடினாய்… உன் குழந்தையின் பருவ காலம் முடிந்தது என்று? எதோ சொல்கிறாள் என்று விட்டுவிட்டேன்…
அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் வழியை உணர்தேன்…
அம்மாவிடம் கூறினேன் நான் படிக்க போகிறேன் என்று… கனவுகள் இருக்கிறது என்று கூறினேன்… அம்மா கூறினால் அதற்கு : இந்த உலகத்தில் பெண்ணாக பிறந்துவிட்டால் நமக்கென்று ஆசைகள் இருக்க கூடாது கனவுகள் இருக்க கூடாது என்று… சரி என்று கவலையோடு கடந்து சென்றேன்…
கொஞ்ச காலம் சென்றது…
அப்பா என்னிடம் கூறினார்… !
உனக்கு ஒரு வரன் வந்துருக்கு என்று…
எனக்குள் இருக்கும் ஆசைகள் கனவுகள் எல்லாம் மறைத்துவிட்டு என் அம்மா அப்பாவின் சந்தோஷத்திற்காக சரி என்று ஒப்புக்கொண்டேன்…
இது போல் மற்றவர்களின் சந்தோஷத்திற்காக எனது சந்தோசத்தை இழந்தேன்… திருமணம் முடிந்தது !
நாட்கள் கடந்தது !
என் தாய்க்கு நான் தந்த சந்தோசம் என்னில் தோன்றவில்லை… பிள்ளைகள் கடவுளால் கொடுக்கும் வரம் என்பது புரியாத இந்த உலகம் மலடி என்று பெயர் வைத்தது…
என் (பெண்ணின் ) கனவுகள் ஆசைகள் என்ன என்று கேட்கும் புதிய உலகத்தை பார்க்க விரும்புகிறேன்… !
பிள்ளைகள் பெற்று தாய்மை அடைந்தாள் தான் பெண் என்றால்… இப்பிறவி எதற்கு?
வேறுபாடு இல்லாத உலகத்தில் வாழ ஆசைப்படுகிறேன்…
என் கனவுகள் மட்டும் சிதறி போகட்டும்… இனி பிறக்கும் ஒவ்வொரு பெண் பிள்ளைகளின் கனவுகள் நனவாகட்டும்… !!
புதிய உலகத்தை படைத்திடு
பெண்மையை போற்ற வழி வகுத்திடு
இதுவும் என் கனவுகளே
நிறைவேற்றிடு… !!!