புரிந்து கொள்ள
முடியாத அமைதியில்
தெரிந்து கொண்டேன்,
என்னவன் என்மீது கொண்ட
அன்பின் ஆழத்தையும்,
பாசத்தின் உச்சத்தையும்…
என் மனதில் நினைத்ததை
நினைத்தவாறே கூறுகையில்
புரிந்து கொண்டேன்
என் மனதைக் கவர்ந்ததின்
உச்சகட்டத்தை…
நான் எவ்வளவு தொலைவில்
இருந்தாலும் அவன் கண்களால்
என்னைக் கொள்ளையடித்து
விட்டு ஓடுகிறான்…
நான் எதிர்பாரா நேரத்தில்
என் முன்னே தோன்றி
தட்டுத்தடுமாற செய்து விடுகிறான்…
அவனது குரும்புத்தனத்தின்
அஸ்திவாரம் நானே!!!
புரிந்து கொண்டேன்
அவனின்றி கடுகளவும்
என்னால் எதுவும் செய்ய
இயலாது என்பதை…!!!