Community

ஒரு பொம்மையின் காதல் கதை

உணர்வுள்ள மனிதர்களுக்கு மட்டுமே காதல் வருமா என்ன… அப்படியென்றால் சில சமயத்தில் உணர்வுகளுள்ள காதல் மதிக்கப்படாமல் போகிறதே அதனை என்னவென்று சொல்ல… இந்த கதையில் மாறுப்பட்டவிதமாக உணர்வில்லா ஒரு பொம்மைக்கு ஏற்படும் காதலும், அதனால் அம்பொம்மை சந்திக்கும் வலிகளும், வேதனைகளும் என அனைத்து விதமான உணர்வுகளையும் கற்பனையால் உருவாக்கியிருக்கிறேன்…

பரந்து விரிந்த அந்த பெரும் அங்காடி தெருவில், பிரம்மாண்டமாக ஜொலித்துக்கொண்டிருந்தது அந்த கடை. அதில் இல்லாத பொருட்களே இல்லை… ஊரே அடங்கி உறங்கினாலும்… அடங்காது அயராது உழைத்துக்கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் கொண்ட பெரும் கடை. விழாக்காலம் என்பதால் இன்னும் அதிகமாய் உழைத்துக் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே பலப்பல பொருட்களை இறக்குமதி செய்துக்கொண்டிருந்தார்கள். அப்பெரும் கடைக்கு சொந்தக்காரன் தான் சிருஷித். ஓயாமல் உழைக்கும் உழைப்பாளி… விழாக்காலங்களில் தன் சலுகைகளாலே அனைவரையும் தன் கடை பக்கம் ஈர்ப்பவன். பல ஊர்களிலிருந்து விதவிதமான பொருட்களை கொண்டு வந்த விற்பவன் . குறுகிய காலத்திலே பொருளை ஈட்டி பணக்காரனானவன். அப்படியொரு நாள் பொருட்களை இறக்குமதி செய்துக்கொண்டிருந்த வேளையில் அதிலிருந்து வந்தாள் அந்த தேவதை.

இருளில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் அவளவனின் வாழ்வை ஒளிமையமாக்கவே
உதித்தாள் அந்த கூர்விழிகளுடைய செந்நிறத்தாள்.

அது ஒரு சின்ரல்லா பொம்மை … பார்பதற்கே மிகவும் அழகாக… எளிதில் எந்த குழந்தைகளையும் ஈர்க்கும் விதமாக இருந்தது அந்த பொம்மையின் தோற்றம்.
அந்த கடையில் வேலை செய்யும் தொழிளாலர்கள் வந்த அனைத்து பொருட்களையும் உள்ளே அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த சின்ரல்லா பொம்மை கொண்டு சென்று ஒரு ராக்கில் வைத்தனர். அப்பொழுது அங்கேயிருந்த ஒரு பிரின்ஸ் பொம்மை , சின்ரல்லா பொம்மையை பார்த்தவுடன் காதல் வயப்பட்டது. எப்படியாவது அதன் அருகில் சென்று அமரவேண்டுமென உள்ளம் துடித்தது. ஆனால் எப்படி…எப்படி அங்கு செல்வது என மிகுந்த குழப்பத்திற்குள்ளானது ப்ரின்ஸ். ஏனென்றால் இருவரும் எதிர் எதிர் ராக்கில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதே நேரத்தில் அந்த சின்ரல்லா பொம்மை அருகிலுள்ள ஸ்னோ பிரின்சஸ், டெடி, குரங்கு பொம்மைகள் என அனைத்தும் தங்களை அந்த புதிதாக வந்த சின்ரல்லா பொம்மையிடம் அறிமுகப்படுத்திக்கொண்டது. அதனையே ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்தது பிரின்ஸ் பொம்மை. " என்ன பிரின்ஸ் புதுசா வந்தவளையே அப்படி பார்க்குற… எதுவும் சரியில்லையே" என்றது அதன் அருகிலிருந்த பார்பி பொம்மை. " இல்ல எனக்கு அவ கிட்ட பேசனும்… அங்க பாருங்க அவங்கயெல்லாம் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்கனு… யார பார்த்தும் எனக்கு வராத ஒரு எண்ணம், என்னமோ அவள் கிட்ட பேசனும்னு தோனுது" என்றது பிரின்ஸ் பொம்மை. " என்ன பிரின்ஸ் விளையாடுறியா… நம்ப நிலைமை உனக்கே தெரியும்… யார் எப்போ பிரிவோம்னு நமக்கே தெரியாது … இதுல தேவையில்லாத ஆசைய வளர்த்துக்காத" என்று ஏதார்த்தத்தை கூறி பிரின்ஸ்சுக்கு புரியவைக்கு முயற்ச்சித்தது பார்பி. பார்பி கூறியதை கேட்ட பிரின்ஸின் முகம் வாடியது. அதை கவனித்த கரடி பொம்மை " என்ன பார்பி பேசுற …நம்ப பிரின்ஸுக்கு நாம தான உதவி செய்யனும் … பாரு அவன் முகம் எவ்ளோ வாடிப்போச்சி" என்று தேற்றிவிட்டு. என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தது. உடனே யோசனை வந்தவனாய் பிரின்ஸை கீழே தள்ளிவிட்டது அந்த கரடி பொம்மை. அதை பார்த்த பார்பி…ஏய் என்ன பண்ணுற …எதுக்கு பிரின்ஸை தள்ளிவிட்ட என்று கத்தியது. அந்த நேரம் பார்த்து அங்கே வந்த சிருஷித், யாரும் இங்க ஒழுங்கா வேல பார்க்குறதே இல்ல …பாருங்க பொம்மையெல்லாம் இப்படி விழுந்து கிடக்கு என்று அங்கே வேலை பார்பவர்களை திட்டிக்கொண்டிருந்தான். அப்போது அருகே வந்த ஒரு பணிப்பெண், சாரி சார் இப்போ எடுத்து வைத்துவிடுகிறேன் என்று சொல்லி இருந்த இடத்திலே அந்த பிரின்ஸ் பொம்மையை வைத்துவிட்டு சென்றாள். ப்ரின்ஸின் முகம் உடனே வாடி விட்டது. சின்ரல்லாவின் அருகில் மாற்றி வைப்பார்கள் என கனவு கண்ட அந்த ப்ரின்ஸ் பொம்மையின் ஆசை தூள்தூளாக உடைக்கப்பட்டது. அப்போது பார்பி சிரித்துக்கொண்டு, " நான் தான் சொன்னல நம்மை மாற்றி வைக்கமாட்டாங்கனு … நீங்க நான் சொல்லுறத எங்க கேட்குறீங்க … இனிமேல்லாவது இது மாதிரி லூசு தனமா முயற்சி பண்ணாம அமைதியா இருங்க" என்று எச்சரித்தது. நீகொஞ்சம் சும்மா இரு என்றுவிட்டு, தன்னுடைய முயற்ச்சி வீணானதை எண்ணி வருத்தமுற்றது கரடி பொம்மை.

இவையணைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஸ்னோ பிரின்சஸ், சின்ரல்லாவிடம் இவரு தான் இந்த கடையோட ஓனர் சிருஷித். கொஞ்சம் கண்டிப்பாவர் தான் ஆனாலும் அன்பாவர்… அவருக்கு பொம்மைங்கனா ரொம்ப பிடிக்கும் அதனால நமக்கு அடிப்படாம பார்த்துப்பாரு என்று சொல்லிக்கொண்டிருந்தது. அதை கேட்ட குரங்கு பொம்மை, " நம்ப கீழ விழுந்து உடைஞ்சிட்டா அவருக்கு தான நஷ்டம் அதான் பாசமா பார்த்துக்கொள்கிறார், வேற ஒன்னுமில்ல" என்று சலித்துக்கொண்டது. அவன விடு இப்படி தான் அவன் என்று விட்டு, சின்ரல்லாவிடம் பேசிக்கொண்டிருந்தது ஸ்னோ பிரின்சஸ். இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. ஸ்னோ பிரின்சஸும், சின்ரல்லாவும் நன்றாக பழக்கமாகினர். அதை பார்த்து அவர்களோடு ஒன்றாக முடியவில்லையே என ஏக்கிக்கொண்டிருந்தது பிரின்ஸ் பொம்மை. அப்பொழுது ஒரு நாள் அந்த கடைக்கு வந்திருந்த ஒரு குழந்தை ஸ்னோ பிரின்சஸ் பொம்மை பார்த்து வாங்கி தரும்படி அதன் தாயிடம் வற்ப்புருத்தியது. அவகளும் அந்த பொம்மையை வாங்கிக்கொண்டு சென்றனர் இதனால் சின்ரல்லா தனது உயிர் தோழியை விட்டு தனிமையாக்கப்பட்டால். அடுத்த இரண்டு நாட்களுக்கு சின்ரல்லாவுக்கு குரங்கு பொம்மையே ஆறுதலாய் இருந்தது. சின்ரல்லாவின் சோகமான முகத்தை பார்த்து பிரின்ஸ் பொம்மையும் வருத்தமுற்றது. அதன் பின்பு ஒரு நாள் வந்திருந்த குடும்பம் அனைத்து பொம்மைகளையும் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சரியாக சின்ரல்லாவிடம் வந்த பொழுது அவர்களின் கைகளிலிருந்த குழந்தை அந்த பொம்மையை பார்த்து அது வேணும் …அந்த பொம்மை வேணும் என்ற அழுதது. அதை பார்த்த பிரின்சஸின் மனம் உடைந்தது. " ஐய்யோ நான் பேசவேயில்ல…அதுக்குள்ள போகபோறாளே… போக கூடாது…அவ போகக்கூடாது" என்று புலப்பிக்கொண்டிருந்தது. அந்த புலப்பல் ஏற்க்கப்பட்டதாலோ என்னவோ. அந்த குழந்தையின் தாய், இந்த மாதிரி பொம்மை தான் நீ நிறைய வைத்துக்கொண்டிருக்கல… இது வேணா செல்லம்… அங்க வைத்துட்டு வா என்று சொல்லி அந்த பொம்மையை மாற்றி பிரின்ஸின் அருகில் வைத்துவிட்டு சென்றாள். அதை பார்த்த பிரின்ஸிற்கோ இரட்டிப்பான சந்தோஷம். பாருடா ப்ரின்ஸ், நீ அங்க போகனும் நினைச்ச ஆனா அவ இங்க வந்துட்டா பேசு ப்ரின்ஸ் என்று டெடி வற்புறுத்தியது. ப்ரின்ஸிற்கோ சின்ரல்லா தனதருகில் என்பதை விட அவள் போகவில்லை என்பதே பெரும் நிம்மதியை தந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு பிரின்ஸ் சின்ரல்லாவிடம் பேச ஆரம்பித்தான். “ஹாய் நான் பிரின்ஸ் … நீங்க” என்றது. நான் சின்ரல்லா என்று பதிலளித்தவுடன். சரியாதா இருக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்றது பிரின்ஸ் சின்ரல்லாவை பார்த்து. அதற்கு சின்ரல்லா அழகாய் சிரித்தது விட்டு பின் சோகமான முகத்துடன் " ஆனா என்னை தான் பிடிக்காம இங்கயே வைத்துவிட்டு போயிட்டாங்களே " என்றது. " அதற்கு எதற்கு வருத்தபடுற… உன்னை போய் யாருக்காவது பிடிக்காம போகுமா…அவங்க ஒன்னும் உன்னை பிடிக்காம வைத்துவிட்டு போகலயே… அதற்கெல்லாம் கவலை படாத"… என்று தேற்றிவிட்டு " ஏன் உனக்கு இங்க இருக்க பிடிக்கலயா என்றது வருத்த்துடன்". "இருக்க பிடிக்காமலாம் இல்ல… என் உயிர் தோழியாயிருந்த ஸ்னோ போய்ட்டா அதான் இத்தனை நாள் கவலையாயிருந்தது… இப்போ இந்த குழந்தை கூட போனா …ஜலியா விளையாடலாம்ல அதான் " என்று பதிலளித்தது சின்ரல்லா. அதை கேட்டு, ஏன் ஸ்னோ மட்டும் தான் உன் தோழியா நாங்கலாம் இல்லையா என்ற வந்தது பார்பியும், டெடியும். அப்படிலாம் இல்ல நீங்க ப்ரெண்ஸ் தான் என்று சொல்லி கொண்டு அவர்களோடும் ஐக்கியமானாள் சின்ரல்லா. அதன் பிறகு அவர்கள் உலகில் மகிழ்ந்திருந்தனர். பிரின்ஸும், சின்ரல்லாவிடம் நன்றாக பழகினான். அப்பொழுது ஒரு பிரின்ஸ் தன் காதலை சின்ரல்லாவிடம் தெரிவித்தது. ஆனால் சின்ரல்லாவால் அதை ஏற்க முடியவில்லை. உயிர் தோழியாக நினைத்த ஸ்னோ பிரிந்ததையே ஏற்கமுடியவில்லை…இதில் காதல் கொண்டால் எங்கே சேரமுடியும்… யார் எப்போ, எந்த திசையில், எப்படி பிரிவோம் என்றே தெரியாத நிலையில் காதலெல்லாம் ஒத்துவரதென்று நினைத்து மறுத்துவிட்டாள். சின்ரல்லா மறுத்த சோகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் யாரிடம் பேசவில்லை பிரின்ஸ். உண்மை நிலை புரிந்து மாறிவிடுவான் என்று நினைத்து அனைவரும் அமைதிக்காத்தனர். ஆனால் அந்நேரத்தில் எமனாய் தோன்றினார் ஒரு வாடிக்கையாளர், அவர்களுக்கு பிரின்ஸ் பொம்மையை மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் எடுத்துச்செல்லும் பொழுதும் மறந்தும் கூட சின்ரல்லாவை பார்க்கவில்லை பிரின்ஸ். அதுவே வெகுவாய் பாதித்தது சின்ரல்லாவை.

பிரின்ஸின் பிரிவு சின்ரல்லாவை நிறைய பாதித்தது. எப்பொழுதும் சிரித்து பேசும் பிரின்ஸை ஏக்கத்தோடு எதிர்நோக்கினாள். ஆனால் அவள் சோகம் கூட நிலைக்கவில்லை அதள்குள் அவளையும் ஒரு வாடிக்கையாளர் வாங்கிகொண்டு சென்றுவிட்டன்ர். ஆனால் அவளின் நல்ல நேரம் வந்த குழந்தைக்கு பார்பி, டெடி, குரங்கு பொம்மையென அனைத்தும் பிடித்திருந்தது. அவர்கள் அனைவரையும் ஒரு பையில் போட்டு அடைத்து ஒப்படைத்தனர். பிறகு வீட்டிற்கு சென்ற அந்த வாடிக்கையாளர், கவரை பிரித்து அதிளுள்ள பொம்மைகளை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தன் செல்ல மகளை அழைத்தார். அவரின் மூன்று வயது மகள் அழகாக கையில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு நடந்து வந்தாள். அப்பொம்மையை பார்த்த அனைவருக்கும் சந்தோஷம் தாளவில்லை… ஏன்னென்றால் அது ப்ரின்ஸ் பொம்மை. பிறகு அந்த குழந்தை அனைத்து பொம்மையையும் பார்த்து மகிழ்ந்து விளையாடியது. விளையாடி முடித்ததும் ப்ரின்ஸ் பொம்மையை சின்ரல்லாவின் அருகில் வைத்துவிட்டு உறங்கியது அந்த குழந்தை. ப்ரின்ஸின் அருகில் அமர்ந்த சின்ரல்லாவுக்கோ சந்தோஷம் தாளவில்லை உடனே ப்ரின்ஸிடம், “என்ன மன்னித்து விடு ப்ரின்ஸ் நீ கூட இருக்கும் போது தெரியல ஆனா நீ போனதுக்கு அப்புறம் என்னல அங்க இருக்க முடியல …உன் காதல் உண்மை ப்ரின்ஸ் அதனால தான் என்ன இங்கையே கொண்டு வந்து விட்டது என்று மகிழ்ந்து கூறியது”. சின்ரல்லா தனது காதலை உணர்ந்த மகிழ்ச்சியில் ப்ரின்ஸும் மகிழ்ந்தது. அதன்பிறகு இருவரும் மகிழ்ச்சியில் இருந்தனர், இனி நமக்கு பிரிவில்லை என எண்ணி தங்கள் உலகில் காதலோடு வாழ்ந்தனர். ப்ரின்ஸின் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பார்பியும், டெடியும் உடன் மகிழ்ந்தனர்.

    **************** முற்றும் *************
               
                         - க.பணிமொழி.
1 Like