என் நாளோ, உன்னில் தொடங்கி உன்னுடன் முடிந்திட வேண்டும்…
தூக்கம் கலைத்து கொடுமை செய்திடு…
தன்னை மறந்து கனா கண்டிட உன்னிள் இடம் கொடுத்திடு…
என் பேச்சின் அழகினை ரசித்திடும் களைஞனாய் நீ வேண்டும்…
என்னுள் பாதியாக அல்லாது முழுவதுமாக ஆட்சி செய்பவனாய்/ளாய் வேண்டும்…
எப்பொழுதும் அன்பானவளாய் /னாய் இருந்திடாது கொற்றவை/ போராளி ஆகவும் இருந்திடு…
என்னை ரசிக்க கற்றுக்கொடு உன்னை ரசிக்க கற்றுக்கொள்கிறேன்…
சினம் கொண்டு செய்யும் செயலை வர்ணித்திடு…
என் கோபம் கலைத்திட பிடிவாதம் பிடித்திடு…
என்னிடம் உள்ள மொழியில் உன்னை கவியாக்குகிறேன், உன்னிடம் உள்ளதில் பரிசளித்திடு…
காதலிக்க கற்றுக்கொடு வாழ்வதற்கு கற்றுத்தருகிறேன்…
வார்த்தை மொழியில் காதலி, பார்வை மொழியில் உன்னை ஆள்கிறேன்…
இதுவோ நாணம்
என்று வியக்கும் படி
தன்னை மறந்து
வெட்கம் கொள்கிறேன்,
எனை ஆளும் அவன்
ஆளுமையில், என்று அவளும்…
சண்டையிடுகிறாளா?
சமாதானமாக்குகிறாளா?
காதல் மொழி பேசுகிறாளா?
என்று குழம்பி தவிப்பதிலே
அவள் வசமாக்கப்படுகிறேன் என்று அவனும்…
வாழும் காலம் முழுதும் உன் வாழ்க்கையை, எனக்காக வாழ்ந்து விடாதே, என்னுடன் வாழ்ந்து விடு என்று இருவரும்…
#Priya…