Community

கனவுலகின் கொலைகளம்

டேய்… பாத்து எடுத்துட்டு போடா அது கண்ணாடி போட்டோ… தாத்தாவோட முக்கியமான போட்டோ வேர என்று மகன் ரகுவரன் னை நோக்கி அவன் அப்பா ராஜனின் குரல்… புதியவீட்டிற்கு குடியேறிக்கொண்டிருந்தனர்… புதிய வீடு… நிறைந்த சந்தோஷம்…

பால் பொங்கலை விட அளவிற்கதிகமான சந்தோஷம் நிறைந்த குடும்பம்… உற்றார் உறவினர் கூட விமரிசையாக நடந்து முடிந்தது.

மாலை நேரம்…
…ரகு அந்த தாத்தா போட்டோவ எடுத்துட்டு வா…
சேர் மீது ஏறி நின்று போட்டோவை மாட்டி… பூ வைத்துவிட்டு… தீபம் ஏற்றி வணங்கினர்.
ரகு வின் தாத்தா ராகவேந்திரன் ஒரு நான்கு மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் தவறிவிட்டார் . நன்றாக இருந்த மனிதன் மாரடைப்பு இதுவரை வந்ததில்லை… எப்படித்தான் இறந்தாரோ என்ற மர்மம் எல்லாரிடத்திலும் இருந்தது…
மாரடைப்பு என்ன சொல்லிவிட்டா வரும்… என்று அப்போது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ராகவேந்திரன் புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ரகுவின் அப்பா ராஜன் அவரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்.

இறுதியாக ரகுவரன்… கல்லூரியில் மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன்… நவீன காலத்து இளைஞர்கள் என்பதால் புத்தகம்… கதைகள் இவைகளில் நாட்டம் இல்லாதவன்…

பழைய வீட்டிவ் இருக்கும் போது நான்கு பேர்… இப்போது வெரும் மூன்றுபேர் மாத்திரம்…
ரகு தன் தாத்தாவிற்கு நேர் எதிர்…

சின்னவயதிலிருந்தே அவரை சற்று பிடிக்காமல் விலகியே இருந்துவிட்டான்…
காரணம் புத்தகங்களை படிக்குமாறு வற்புறுத்துவார்…அதனாலேயே அதிகம் பிடிக்காமல் போய்விட்டது. அதை தவிர தாத்தா வாங்கிதரும் இனிப்பிற்கும் காரத்திற்கும் மட்டும் விதிவிலக்கு.

அவர் மறைவு சோகத்தை ஏற்படுத்தினாலும்… ரகுவிற்கு பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை… தாத்தாவின் புத்தகங்கள் பற்றும் ஒருசில பொருட்கள் அடங்கிய பெட்டி புதியவுட்டின் பரண் மீது போட்டுவைத்திருந்தனர் …அதை எடுக்கவேண்டாம் என்றும் ராஜன் சொல்லியிருந்தார்.
இப்படியாக நான்குமாதங்கள் ஓடிவிட்டது.
…செமஸ்டர் விடுமுறை வந்தது… கிரிக்கெட், நண்பர்களுடன் அரட்டை என்று நாட்கள் ஓடிவிட…
ஒருநாள் காலையில் ‘டேய் தம்பி அந்த பரண் மேல இருக்குற அந்த பாத்திரத்த எடுத்துகுடு’
என்று அம்மாவின் குரல்.

ஸ்லாப்பை பிடித்து ஏற கால்கள் இடரி பொத்தென்று கீழே விழுந்துவிட்டான்…

'டேய் பாத்துடா… ’

'ஒன்னில்ல மா… '!

டேபில் ஒன்றை வைத்து மேலே ஏறி பாத்திரத்தை எடுத்து குடுக்க… பக்கத்தில் தாத்தாவின் பெட்டி…
'கீழ வாடா அதான் எடுத்திட்டல்ல அப்ரோ என்ன இன்னு பாத்திட்டிருக்க… வா போதும்… ’

அதை பார்த்துக்கொண்டை கீழே இறங்கி டீவி பார்க்க சென்றுவிட்டான்…பார்த்துக்கொண்டே திரும்பி தன் தாத்தாவின் போட்டோ பார்க்க ரகுவை பார்த்து சிரித்தபடி ராகவன். ஊதுவத்திகளின் புகை சற்று கலக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க… " இந்தாடா டீ குடி " என்று அவன் அம்மா டீ கிளாசை நீட்டினார். "எப்போடா ரிசல்டு வருது? "

“அடுத்த வாரத்துல மா”

"ம்… என்ன பாஸ் ஆய்டுவியா… எப்டி எழுதிருக்க? "

"அதெல்லாம் ஆய்டுவம்மா… ஈசியாதா இருந்திச்சி… "

அடுத்த நாள்…

வீட்டில் யாரும் இல்லை… அம்மாவும் பக்கத்து வீட்டு விசேசத்திற்கு சென்றிருந்தார்.
ரகு மெதுவாக எழுந்து தாத்தாவின் போட்டோ பக்கத்திற்கு போக மின்சாரம் இல்லாததால் தாத்தா போட்டோவின் மின்விளக்கு எரியாமல் இருட்டாக இருந்தது.

பரண் மீது ஏறி தாத்தா வின் பெட்டியை எடுத்து திறந்து பார்த்தான்… படித்த பழைய புத்தகங்கள் மட்டும் தான் இருந்தது.

"ச்சே இவ்லோ தானா… நாகூட வேர எதாச்சோம் இருக்கும்னு பாத்தனே!?.. "

பெட்டியின் அடியில் தங்க நிற புத்தகம் ஒன்று இருந்தது… அதை எடுக்க… உடனே யாரோ வருவதுபோண்ற சத்தம்…
வேகவேகமாக பெட்டியை மூடி பரண்மேல் போட்டுவிட்டு சென்றுவிட்டான்…
ஆனால் யாரும் இன்னும் வீட்டிற்கே வரவில்லை… மின்சாரம் வந்து… டீவி சத்தம் அது…

செரி நாளைக்கு பார்த்துக்கொள்ளளாம் என்று போய்விட்டான்…

ஆனால் இரவு முழுக்க அந்த தங்க புத்தகத்தை பற்றிய நினைவும் கனவும்தான்… "நாளைக்கு எப்பிடியாச்சோம் அந்த புக்குல என்ன இருக்குன்னு பாத்துடனும்… "

அடுத்த நாள் காலை…

அப்பா வழக்கம்போல வேலைக்கு கிளம்பிவிட்டார்… அம்மா சமையல் செய்துகொண்டிருக்க… அருவமில்லாமல்… பரண் ஏறி அந்த புத்தகத்தை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டுக்கொண்டு…
"ம்மா… நா மேல இருக்க ரூம்கு போரேன்… கொஞ்சம் வேல இருக்கு… ’

"செரி போ… மதியம் சாப்ட வந்துரு என்னால மேலயும் கீழயும் நடக்கமுடியாது சொல்லிட்டேன் "

"செரி வந்துர்ரேன் இரு " என்று மேலே போகும் முன்பு தாத்தா வின் போட்டோ வை பார்க்க… அது காற்றில் பலமாக ஆடிக்கொண்டிருந்தது…

மேல்மாடிக்கு போய் “அப்பாட ஒருவழியா வந்தாச்சி… படிச்சிரவேண்டியதுதான்” என்று நேரத்தை பார்க்க பத்து மணி என்று காட்டியது.
மொபைலை சைலண்ட்ல போட்டுவிட்டு…
இந்த புக்குக்கு எதுக்கு இவ்ளோ அலங்காரம் என்று அந்த அட்டையை பிரிக்க…
பல மொழிகளில் ஏதேதோ கிருக்கிவைத்திருந்தனர்…
ஆனால் எல்லா கிருக்களுக்கும் பொதுவான விஷயம் 120-12 என்ற நம்பர்.

தமிழிலும் படிக்காதே 120-12 என்று கொட்டை எழுத்துக்களில் அந்த அட்டைபடத்தின் மேல் ஒட்டியிருந்தது.

மனதிற்குள் சிரித்தவாரே…" ஓவராத்தான் பயமுறுத்துராங்க… அப்டி என்ன இருக்குன்னு பாக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தான்…

அமானுஷ்யங்களை பற்றிய புத்தகம் என்று முதல் இரண்டு பக்கங்களிலேயே தெரிந்துவிடுகிறது…
எழுத்தாளரைப்பற்றி எதுவும் இல்லை…

சொல்லப்போனால் தொடக்கமே இல்லை…
ஆனால் அந்த இரண்டு பங்களே மிகவும் விருவிருப்பாக இருந்ததால் படிப்பதை தொடர்ந்தான்…
ஐம்பது பக்கங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது ஆனாலும் அவனால் அந்த புத்தகத்தை வைக்கும் எண்ணம் துளியும் இல்லை…

புத்தகத்தின் ஏடுகள் போகப்போக சிவப்பு நிறமாக மாறிக்கொண்டே வந்துகொண்டிருந்தது… அதை அவன் கண்டுகொள்ளவில்லை .

எதேர்ச்சையாக நேரத்தை பார்க்க பதினொன்று!
பக்கத்தில் உள்ள டேபிலில் கை வைக்க அவனது போன் சைலண்டில் இருந்ததால்… அதிர்வலைகளை எழுப்பிக்கொண்டிருந்தது…
எடுத்து ஆன் செய்வதற்குள் கட் ஆகிவிட நான்கு மிஸ்டு கால்கள்… அவன் நண்பன் ஒருவனிடமிருந்து…

"நேரம் போனதே தெரில… இதுக்குதான் தாத்தா புக் படிக்க சொல்வாரு போல… வெரி இன்ட்ரஸ்டட் சாரி தாத்தா "என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டான்…

மீண்டும் நண்பனிடமிருந்து கால் வர்ர… உடனே அட்டன்ட் செய்து… " டே… டே… சாரி டா மொபைல் சைலண்ட இருஞ்சி அதான்டா அட்டரன் பன்னமுடில என்ன விஷயம் சொல்லு!!? "

“ம்ம்… என்னடா பன்ற மதியம் விலயாட போலாமா இல்லயா… சொல்லிடு? '”

"புக்கு ஒன்னு படிச்சிட்டு இருக்கேன் டா… தாத்தா புக்கு… அதான்… "
சிரித்துக்கொண்டே…
"தாத்தா புக் ஆ… உணக்குதா உங்க தாத்தா வயே புடிக்காது… அப்ரோ என்ன அவரோட புக்கு வேர "

"அப்டிலா இல்லடா… நானே பஸ்டு அப்டிதான் நெனச்சேன்… பட் புக் படிக்கிறது எவ்ளோ இன்ட்ரஸ்டட் னு இப்பதான் புரியுது…!
நான் புக் படிச்சிட்டு போன் பண்ரேன் "
என்று போனை துண்டித்துவிட்டு படிப்பதை தொடர்ந்தான்… மீண்டும் அவன் போன் செய்து வற்புறுத்தவே… புக்கல மூடிவைத்துவிட்டு விலையாடச் சென்றுவிட்டான். இரவு முழக்க அந்த புக்கை பற்றிய யோசனைகள்…
மறுநாள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு படிக்கச்செல்லமணி அப்போது 11.30

110 பக்கங்கள் கடந்து படித்துக்கொண்டிருக்க… யாரோ மாடியில் அங்கும் இங்கும் நடக்கும் சத்தங்கள்… கேட்கிறது… சற்று அதை உணர்வதற்குள் அந்த சத்தங்கள் மறைந்து போயின.

பக்கங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது… ஆனாலும் அதின் காரணங்கள் அவனுக்கு விளங்கவில்லை…

கடிகார முள்ளின் சத்தம் பலமாக அவன் காதுகளில் ஒலிக்க… சடாரென்று நேரத்தை பார்க்க 11.50 என காட்டியது… அவன் வலதுபுறத்தில் மூலையில் வைக்கப்பட்டிருந்த பீங்கான் பொம்மை கீழே விழுந்து உடைந்து நொருங்கியது…
சற்று பயந்து பின்பு சுதாரித்துக்கொண்டு… சற்று நிமிர்ந்து பார்க்க ஜன்னல்கள் திறந்திருந்தது … காற்று பலமாக வீசியதால் விழுந்திருக்கும் என்று தன்னை சமாதானபடுத்திக்கொண்டு… மீண்டும் நேரத்தை பார்க்க 11.55

119பக்கத்தில் பிரவேசித்துக் கொண்டிருக்கையில்… அவனுக்கு நேர் எதிரிலிருந்த அறை கதவு மெதுவாக ரிங்காரமிட்டுக்கொண்டே திறந்தது…

ரகுவரனிற்கு தூக்கிவாரிப்போட்டுவிட்டது… "ம்ம் ஏதோ தப்பா இருக்கே "என்று சொல்லிக்கொண்டு… கதவின் அருகில் சென்று… திறந்து பார்க்க… அறை ஜன்னல்கள் திறந்துகிடந்தன…

பெருமூச்சி விட்டுக்கொண்டு அவைகளை மூடிவிட்டு மீண்டும் 119 பக்கத்தை படித்துமுடித்தான்.

120ம் பக்கம் திறக்க ‘பக்கம் முழுவதும் சிவப்பு’

ஒரே ரத்தமாக இருக்க… ரகு தடுமாறிப்போனான்…

கை முழுவதுமே இரத்தம்… ஒரே இரத்த வாடை… என்ன நடக்கிறது என்று செய்வதறியாது… அந்த பத்தகத்தை தள்ளிவிட்டுடிட்டு… இரத்தத்தை ஒரு துணியால் துடைத்துக்கொண்டிருக்க…

அவனுக்கு பின்னால் ஏதோ ஒரு உருவம் நிற்பதை உணருகின்றான்…
மெதுவாக திரும்பி… அதை பார்க்க…

பன்னிரண்டு தலலகளை வைத்த… ராட்சத உருவம் அவன் முன்னே…

நீண்ட பற்கள் ,இரத்தம் குடித்த வாய், இரண்டு கைகளிலும் இரண்டு கருக்காண பட்டயங்கள் ,

கண்களில் இனம் புரியாத ஒரு மூர்கம் குடிகொண்டிருந்தது.

யார் நீ… என்று கேட்பதற்குள் கையில் வெத்திருந்த கத்தியால் ஒரே வெட்டு…

தலை துண்டாக தெறித்து 120ம் பக்கத்தை நனைத்தது…

கண்கள் கடிகாரத்தைப்பார்க்க சரியாக 12.00 மணி…

கடிகாரத்தை பார்த்தவாரே… கண்கள் மூட…

அலறியடித்துக்கொண்டு கழுத்தினில் கை வைத்தபடி… தூக்கத்தில் இருந்து எழுந்தான் ரகு.

எப்போது தூங்கினான் என்றே அவனுக்கு தெரியவில்லை…

கைகளில் இருந்த புத்தகம் கீழே விழுந்துகிடந்தது… படித்தவாரே தூங்கிவிட்டான்…

நேரத்தை பார்க்க 11.55 புத்தகத்தல எடுக்க பக்கம் 118…

உடைந்த பீங்கன் பொம்மையை கீழேபார்க்க உடைந்த சில்லுகள் அங்கு இல்லை… காரணம் அது உடையவே இல்லை…

"அப்பாடா… கணவுதானா… பிரச்சினை இல்லை என்று பெருமூச்சி விடும்போதே… அந்த பீங்கான் பொம்மை… உடைந்து நொருங்கியது…
அங்கும் இங்கும் யாரோ ஓடும் சத்தம்… எதிர் அறையை பார்க்க… பார்த்து போலவே மெதுவாக அதின் கதவு திறந்தது…

ஓடிப்போய் அந்த கதவை தாழ் போட்டு… நேரம் பார்க்க 11.59…
ரகுவிற்கு கைகள் நடுக்கம் காண்கிறது… கால்களும் தான்…

உடல் முழுவதும் உஷ்ணம் ஏறி வியற்வையாக கொட்டுகிறது…

அந்த புத்தகத்தை அப்படியே மேலேயே மூடிவைத்துவிட்டு கீழே இறங்கி வந்துவிடுகிறான்…

இரவு…

"ஏன்டா உன்ன யாரு அப்பா பத்தகத்த எடுக்க சொன்னா? … மேல போரென் டேபில் மேல இருக்கு… எப்பிடி அங்க போச்சி புக்கு… அதெல்லாம் படிக்ககூடாது செரியா… " என்று சற்று கோவமாகவே கடிந்துகொண்டார் ராஜன்.

"ப்பா… தாத்தா எப்டி இறந்தாரு… "

"ஹார்ட் அட்டாக் தான்டா… ஏன் புதுசா கேக்குற… ஆனா அதான் பஸ்ட் அன்ட் லாஸ்ட் தாத்தா வுக்கு…
இப்ப எதுக்குடா என்ன இதலாம் பேசவைக்குற… என்று கலங்கியபடி கேட்க… "

இல்லப்பா… அந்த புக்க பத்தி பேசுரிங்களே… படிக்கவேணாம்னு சொல்டிங்க அதான் கேட்டேன்… "

"அவர் படிச்ச கடைசி புக்கு அதான்… அத யாரு அவருக்கு குடுத்தாங்கன்னே தெரில… படிச்சிட்டு இருக்கும்போதே திடீர் னு ஹார்ட் அட்டாக்… "

அந்த புக்க முழுசாவே படிக்கல… ஆனா அவரு சாவும்போது அந்த புக்கு அவரோட கையில கெட்டியா புடிச்சிட்டு இருந்தாரு…

“அந்த புக்கோட பக்கத்த பாத்திங்களா… டெத் டைம் தெரியுமா…? '”

பக்கம்… ஒரு 110-120 குல்லதான் இருந்திச்சி…

டெத் டைம் ரிப்போட்ல 12-12.30 இதுக்குள்ள னு சொன்னாங்க…

வேகமாக வந்து தந்தையை கட்டிப்பிடித்துக்கொள்ள…
ராஜன் சிரித்துக்கொண்டே… " உன்ன அவருக்கு ரொம்ப புடிக்குண்டா… நீதான் அவர புரிஞ்சிக்கவே மாட்ட… "

தன்னை கனவில் வந்து உணர்த்தியது தாத்தா தான் என்று ரகவரன்… மெதுவாக உணர்ந்துகொண்டு… தாத்தா போட்டோவை பார்க்க…

சிரித்த முகத்துடன் பிரகாசமாக ராகவேந்திரன்.

ரகுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது…

-முற்றும்

S. Jacob Meshak.
6380270228

1 Like