காத்திருக்கும் தருணங்களின் தாமதம்
எதிர்பார்த்திருக்கும் நிமிடங்களின் சுவாரசியத்தை கூட்டிக் கொண்டிருக்கும்…
அந்திப்பொழுதில் கரையும் வெயிலின்
கதிர்க்கழிவுகளை நீலங்களால் வானம்
சுத்தம் செய்யும் நேரத்திலே…
ஆறி கொண்டிருந்த தேநீரை பருகாது
நான் ரசித்துக் கொண்டிருந்த
என்னவளின் ஞாபகங்களை…
அசைப்போட்ட சிந்தைக்கு
தெரியாத விந்தையை
இயற்கை தனது சந்தையில்
விற்றுக் கொண்டிருந்தது…!
உணராத சூழ்நிலையை
புணராத உள்மனமோ
உதவாத அறிவுரைகளை
உதறியபடியே நள்ளிரவை வரவேற்றது…
திங்களின் ஒளியில் இரவும் ஜொலித்தது
திண்டாடும் மனதோ அதை
கொண்டாட வெறுத்தது…
மெளனங்கள் வாசம் செய்யும்
உறங்காத படுக்கையில்…
என்னோடு உறவாடும் கைப்பேசியின் வசதியில் வலைத்தள ஜன்னல் வழியே
அவளை தொடர்புக்கொள்ள யோசித்தேன்…
ஊடலின் தீரத்தில் காதலின் உஷ்ணம் குறையாது கலந்துரையாடதென அறிந்த
நான் எழுதிய அன்றையை கவிதையில்
பெருங்கடலென அகன்ற ஆழங்கொண்ட
மனதோடு பிறந்தப் பெண்ணே
கனலெனக் கொண்ட கோபத்தின்
பொருளென்ன அதை அகற்றிடத் தான்
வழி உள்ளததோ…
என எழுதி முற்றுப்புள்ளிகள் முற்றுமென நினையாதே அவை அழியாது தொடரும்
காதல் பிறவி என அறிவித்து
போர்த்தி படுத்தேன்…
கனவுகளில்
என்னை தொல்லை செய்ய வா என
நான் காத்திருக்கும் தருணங்களை குறுஞ்செய்தியில் அனுப்பினேன்…!
எண்ணமும் எழுத்தும்
#காதலுடன்SG💘