காதல் செய்
உன்னையே நீ அறிவாய்
உலகத்தை நீ மறப்பாய்
உயிர்களை ரசிப்பாய்
உதிரத்தில் இளமையை உணர்வாய்
காதல் செய்
மெல்ல மெல்ல சிரிப்பாய்
சத்தமின்றி அழுவாய்
செத்து செத்து வாழ்வாய்
செல்லம் கொஞ்ச பொய்ப்பாய்
காதல் செய்
கண்ணீரால் கதைப்பாய்
கானலை எண்ணி சிதைவாய்
தூக்கங்களை துறப்பாய்
துயில் எழுந்திட விரைவாய்
காதல் செய்
வண்ணங்களால் பிரமிப்பாய்
வசனங்களை சேகரிப்பாய்
வாசனைகளால் வசீகரிப்பாய்
வாக்கை மதிப்பு செய்வாய்
காதல் செய்
மனதை கற்பனைகளால் நிறைப்பாய்
மானுடம் போற்றும் மனிதனாய் நீ இருப்பாய்
உள்ளத்தைப் பிழிந்து கவிதை சாறு எடுப்பாய்
கள்ளச்சிரிப்பை வைத்தே அவரை நீ கடப்பாய்
காதல் செய்
சாதனைகளை தேடிச் செல்வாய்
சரித்திரத்தில் இடம்பெற துடிப்பாய்
வேலைகளில் அயராது உhழைப்பாய்
இடையிடையே அவர் முகம் நினைப்பாய்
~ தமிழ் கார்த்தி