Community

அன்புடன் திவி..நெயிற்சியுடன் ஆதி

இதழ்கள் கூட
இடை இடையே
இடைவேளை
வேண்டுதடி…
உடைகள் கூட
இடையூறாய்
மாறி போனதடி.
மை இரண்டும்
ஏகாந்தம்
ஆகவே…
சரம் தநு
சேரதான்
நடுநிசிகள் துணை
ஆனதே…
வதிகை இல்லா வேளையில்
நித்யம் நீங்கி போனதே…
முத்தங்கள் மொத்தம் தீர்த்திடும்…
தேன் ஊறும்
தேக ஆழி நீ…

நான் வாழ தோதான
ஆதாரம் நீ…
சீதோஷ்ன மாற்றங்கள் நேர்ந்தாலும்
தாழ்வாரம் நீ…

மெல்ல காதல் கொஞ்சம் எல்லை
மீற ஒற்றை நெற்றி முத்தம் போதுமே…

அவள் மதுவை மிஞ்சிய மதுரம்…
அவளால் பாரத போரும் நிகழும்…
அயலானோ
பால்வீதியிலேயே அலையும்…
ஆலா முகவரி வேண்டி விரையும்…

உன் தூக்கம் தீரும் நொடி வரையில்
தீர்க்க ரேகை சிறை பிடிப்பேன்…

மதி கெட்டு
மழை மேகம்
மதி பாதை தொடர…
பொய் வானம் உதவாதோ
மேகம் நிலவோடு படர.

                                                -ES