Community

ராஜா எனும் மலைப்போர்

சிறுவயதில் ஒய்வு வழி கேட்கும் வயதில் ராஜா பாடல்கள் என் சிறு வயதினை சூழ கொண்டது. அப்பொழுதெல்லாம் டேப்பை திருகி கெய்சட்டை உள் நுழைத்து அவர் பாடல்களை உள் நோக்கி காண்பது வழக்கம்…அப்படி ஆரம்பித்தது தான் தேவர் மகன் பாடல்கள் ஓ ஓ போற்றி பாடடி பொன்னே, மிகவும் பிடித்த பாடல், என் அப்பா என்னை பாட சொல்லி பதிவை கெய்சட்டில் ரெகார்ட் செய்து குடும்பத்தோடு கேட்போம். பள்ளி பருவங்களில் அம்மா என்ற அழைக்காத உயிர் இல்லையே என்ற பாடலை போட்டிகளில் பாடுவேன், கல்லூரிகளில் மீண்டும் தேவர் மகன் பாடல்கள் பாடுவேன், நண்பருக்களுக்காக… தும்பிவா பாடல் என் அலைபேசியில் ஒரு காலர் ட்யூனாக இருந்தது. பொன்னியின் செல்வன் கதை படித்ததில்லை, ஒரு வேளை ராஜா பொன்னியின் செல்வனாக இருந்திருந்தால் எப்படியிருக்கும்? அமைதி தாருங்கள் ராஜா… தந்தேன் வேறு என்ன வேண்டும்? உங்கள் இசை அது நான் தரமுடியாது எனக்கே அது சொந்தம் இல்ல. நான் விஸ்வநாதனை வீழ்த்தி வந்தால் தருவீர்களா? அது உன்னால் முடியாது இசை அவருக்கும் சொந்தம் இல்லை முடிந்தால் எடுத்துக்கொள். அப்படி என்றால் உங்கள் நாடி நிரம்பை தாருங்கள் நான் தேர்ச்சி பெற்ற பின் எடுத்துக்கொள்கிறேன். என்னை கோபப்படுத்ததே சாபம் விட்டு விடுவேன். அமைச்சரே, இவனை வெளியே பந்து போல் வீசியெறியுங்கள்… உத்தரவு மன்னா… கொஞ்சம் பொறுங்கள் நான் பந்து அல்ல உங்கள் ரசிகன் என்னை உங்கள் சிஷ்யனாவாது ஏற்று கொள்ளுங்களேன். அதுவும் முடியாது என்று சொல்லுங்கள் அமைச்சரே… கோபம் வேண்டாம் ராஜா கெஞ்சுகிறேன் என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள். சரி, அப்ப சில கேள்விகள் கேட்கிறேன் உன்னால் அதர்க்கு விடை கண்டறிந்து வர முடியுமா என்று சொல். முயற்சி செய்கிறேன், ராஜா. ஹ்ம்ம், இசை பெரிதா எழுத்து பெரிதா இசை தான் பெரியது ராஜா அவர்களே… என்ன கூகிள் சொல்கிறதா இல்லை உன் மூளை சொல்கிறதா? கூகுளுக்கு அவ்வளவு அறிவு இல்லை என்பது இந்த அடியேனின் செய்தி… உங்களை பற்றி கவிதை ஒன்று கூறலாமா? உத்தரவு இருக்கிறதா? ஹ்ம்ம்…நீர் கூறு…அதர்க்கு பின் கவிதையா இல்லையா என்று நான் முடிவு செய்கிறேன். இப்படி தானே ஆரம்பிக்கிறது…கார் என்பது ஒரு வரி பயணம், அதனால் காரில் செல்ல அவமானமாக கருதினார்… சிட்டு குருவி சித்தர்…சிறகு முளைத்த பின் இசையின் கர்வம் ஏந்தினார்… வண்ண சாணக்கியர்களை தூதாக கருத வில்லை… தான் உண்டு தன் இசை உண்டு என்று யாரையும் புண்படுத்தாமல் இசைக்கான காரியங்களை தூது போல் இயற்கைக்கு சமர்ப்பித்தார்… போட்டி போட வந்தவர்களை வேரோடு சாய்த்தார்…ராஜா இளமையின் தூதுவன்… ஞானி என்றும் மக்கள் அவரை அழைத்து சன்மானத்தை வாங்கிக்கொண்டது… ஓரு புல்லின் அவதி அவனுக்கு மட்டும் தான் தெரியும்…அது தான் அவர் அமைதி. ஹ்ம்ம் பரவாயில்லை சாம்பல் போல் கரையாமல் என்னிடம் வந்து இக்கவிதை சொன்னதர்க்கு நன்றி பாட துப்பில்லை படிக்க துப்பிருக்கிறது போல் தோன்றுகிறது! ஆஹா! நீங்களும் நல்ல கவிஞன் தான். என்ன அமைச்சரே இவன் நமக்கே பாடம் புகுட்டி விடுவான் போல் தோன்றுகிறது…இல்லை மன்னா இவன் வெறும் பூனைக்கு புகுத்திய அவியல் மாறி தான், சாய்ந்துவிடுவான்… நம் இசை போரெல்லாம் இவனுக்கு சாறு போன்று தானே சுவைத்திருப்பான் அந்த தாக்கம் தான் கவிதையில் தெரிகிறது. சரியாக சொன்னீர், சாரி பையா நாங்கள் அப்படி தான் பேசுவோம் கண்டுக்காதே இசைக்கு ஏழு ஸ்வரம் தானே அது எப்படி பெரிதாக இருக்க முடியும்? எனக்கு தெரியவில்லை ராஜா நீங்கள் தான் சொல்ல இயலும்…மன்னரே நான் சொன்னேன்ல இவரு பூனைக்கு புகுத்திய அவியல் என்று… சற்று பொரும் அமைச்சரே அவன் நம்மிடம் சண்டை போட வரவில்லை இசைக்கு கடவுள் கிடையாது மொழியும் கிடையாது ஆரம்பம் இல்லை முடிவும் இல்லை புரிகிறதா? கடவுள் இல்லை மொழி இல்லை என்று புரிகிறது, ஆனால் முடிவு இல்லை என்பது புரியவில்லை. மூச்சுக்கு முடிவு உண்டா தினமும் வாங்கி கொண்டு தானே இருக்கிறாய் அது போல தான்… ஆனால் ராஜா அவர்களே மூச்சு ஒரு நாள் நின்று போய்விடுகிறதே பிறகு எப்படி… ஆனால் மூச்சு எங்கு இருந்து வந்தது அதை யோசித்தாயா? நீங்கள் சொல்வது சரி தான் ராஜா… நான் சரி என்று யார் சொன்னது மூச்சு இருக்குமிடம் எனக்கும் தெரியாது என் இசை வெறும் வாசலில் வந்த கோலம்…நீ என்ன செய்கிறாய்… உன் வேலை என்ன… நான் தகவல் தொழில்நுட்பாளராக பணி புரிந்தேன் இப்பொழுது வேலையைவிட்டுட்டு எழுத ஆரம்பிச்சிட்டேன்…ஏன் எதர்க்கு? எனக்கு எழுத்து என்றால் ரொம்ப பிரியம் ராஜா உங்களிடம் தான் இந்த செய்தியை சொல்ல வேண்டும். சொல்லு… கோடிங் என்ற பெயரில் மக்களின் சிந்தனையை திருடி ஆர்டீபீஷியல் இன்டலிஜென்ஸ்சுக்கு பயன்படுத்துகின்றனர்.அமைச்சரே இச்சிறுவன் சொல்வது சரி தான் டெக்னாலஜியால் நம் மூளையை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர் இதை தொடுத்து நம் அரண்மனையில் இருப்போர் எல்லோருக்கும் இந்த சதி திட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவிடு முக்கியமாக தமிழ்
நாட்டு இளைஞர்களுக்கு. நன்றி ராஜா