இரவின் எழில்:
கருந்திரை மூடிய வான் ;
யாமம் கொள் நிறை நிலா ;
நட்சத்திரப்பூ சூழ் புடவி;
குளிர் கொண்டு தீண்டும் காற்று ;
இரவையே ,
என் அழகியே,
உனை எஞ்சியது ஏதேனுமுண்டோ !
என் கண் நோய்த்தீர்க்கும் அமிழ்து ;
அடி நெஞ்சே,
கண்ணுறங்காயோ கிளியே;
இவ்விரவின் அழகில் மூழ்கியே;
நிலவே,
என் பிணி தீர்க்கும் கனியே,
இவ்வினி யென்றும் குறையுமென
நினைத்தாயோ,
உன்மேற் காதல்…
இவள் ,
கலையரசி சாமிராசா …