வீசும் காத்த
உளவு பாத்து
நெஞ்சலையில்
விழுந்த நீ…
மனசு பூரா
ஊறவச்சி …
ஆழம் ஏறி ஏறி
அழுத்தம் கொடுத்த நீ…
மொட்டு விட்ட
நாள் முதலா
வேலி போட்டு தான்
மறச்ச நெஞ்ச
பக்குவமா
உழவு செஞ்ச நீ…
பச்ச பயிரா
பக்குவமா
விழஞ்சி நிக்கேன்…
எப்போ வருவ நீ…
கூறு விழி கொண்ட
கரடு முரடு காரா …
ஒத்த பார்வை வீச
சில்லு சில்லா உடையிறேனே…
பொட்ட புள்ள
என்ன நீயும்
கிட்டி புள்ளா ஆடுற…
தட்ட தட்ட உடைஞ்சனே…
கார வீட்டு
ஆளு காரி…
பட்டம் கட்டி
தள்ளி தள்ளி நிக்கிற…
ஒன்னு மண்ணா
வாழ தானே
ஒத்த பாயும் போதுமே…
ஒட்டி வாழ
வாயேன் நீ…
-ES