தென்றல் காற்றே வா !
வான் பொழியும்
மழையுடனும்
தேன் சிந்தும்
நிலவுடனும்
கொஞ்சிப் பேசும்
தென்றல் காற்றே ! தமிழ்
மன்றமதில் நான் வாசிக்க
கால நேரமின்றி
வீசிச் செல்கிறாய்
கவிதைகளை !
காலைப்பனியுடன்
கைக்கோர்த்து வந்தாய்
என் துயில் கலைய!
சோலை மலரின்
சுகந்தத்தை ஏந்தினாய்
நான் சுவாசிக்க !
மாலைப் பொழுதின்
மயக்கத்தை தருகிறாய்
மனது பொங்க !
வாலைக் குமரியாக
தென்பொதிகையில்
வலம் வருகிறாய்
கொஞ்சிப் பேசும்
தென்றல் காற்றே
தொற்று நோய் அழியவேண்டி
கெஞ்சிக் கேட்கிறோம்
தென்றல் காற்றே !
ஜெயா வெங்கட்
கோவை.