தாய்மை
நித்தம் கரையும் பால் நிலவாய்
என்றும் மிளிரும் முழு மதியே
தாயாய் தமக்கையாய் தாரமாய்
நிறை உருவாய், கரு உயிராய்
யாம் பெற்ற வரமாய், அன்னையே !
கரம் ஈண்டு , பரம் தந்தாயே
ஓர் நொடி பந்தம், ஓர் யுக சொந்தம்
மூவெழுத்தில், மூவுலகம் தந்தாயே!
மாண்டாலும் மீண்டும் மீண்டும் மீண்டு
முடிவிலி வரம் பெற்று வருவேன்
மடியில் தவழ, கன்னத்தில் முத்தமிட
உம் நிறை உருவாய் , உம் கரு உயிராய்
−ம. பொன் கெளசிகன்