அவமானம் made அலங்காரம்
பரப்பான காலைபொழுது அனைவரும் அவளுக்காக காத்திருந்தனர் அப்போது அவளின் பி. எ க்கு ஒரு அழைப்பு வந்தது அதில் மேடம் கிளம்பிடாங்களா என்று கேட்டார்கள் அதற்க்கு பி. எ மேடம் சிறிது நேரத்தில் கிளம்பிவிடுவார்கள் என்று பேசிகொண்டிருந்தபோது மேலே இருந்து இறங்கி வந்தாள் அவள். எல்லோரும் வணங்கினர் அவளும் வணங்கி அவள் அம்மாவிடம் போய் வருகிறேன் என்று சொல்லி காரில் ஏறி கிளம்பினாள்.கார் நேராக ஒரு விருது வழங்கும் விழாவில் நின்றது.அவளை பல ஆரவாரங்களுடன் அங்கிருந்து உள்ளே அழைத்துச் சென்றனர்.அவள் உள்ளே நுழைந்தவுடன் ஓரே கூச்சல் மாலினி மாலினி என்று அரங்கம் முழுவதும் ஒழித்தது.அவள் அனைவரையும் வணங்கி அவளுடைய இருக்கையில் அமர்ந்தாள் பெரிய பெரிய நடிகர் நடிகைகளும் அங்கு அமர்ந்திருந்தனர்.விருது வழங்கும் விழா ஆரம்பித்தது.பல விருதுகளை வழங்கி கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு அறிவிப்பு வந்தது கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் மனதிலும் சினிமாவிலும் சிறந்து விழங்கிய பெண் நடிகைகான விருது என்று கூறி முடிக்கும் முன்னே மாலினி மாலினி என்று அரங்கம் அதிர்ந்தது.அவளை அழைத்தவுடன் எழுந்து மேடைக்கு சென்றாள்.அவளுக்கு விருதுவழங்கினர் அவள் பேசத்தொடங்கினாள் அனைவருக்கும் வணக்கம் உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி (மக்கள் சத்தம் குறையவே இல்லை) இங்கு நான் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் அதுவேறுயாருமில்லை என்னை உயர்த்திய அவமானம்.அது கொடுத்த வலியால்தான் நான் என் வாழ்வின் வழியை தேர்ந்தெடுத்தேன்.இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறி விடைப்பெற்றாள்.மறுநாள் காலையில் மிகப்பெரிய பத்திரிகை நிருவணம் அவளின் வாழ்க்கை வரலாற்றை பேட்டி எடுக்க அவளிடம் ஒப்புதல் கேட்டு வந்தது.அவளும் ஒப்புக்கொண்டு நாளை மாலை வைத்துக்கொள்ளலாம் என்றாள்.அவர்கள் சென்றவுடன் அறைக்கு சென்று கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தாள் பல நினைவுகள் கண்முன் வந்து சென்றன.மறுநாள் மாலையில் சந்திப்பு தொடங்கியது. மேடம் ஆரம்பிக்கலாமா என
கேட்டனர்.அவளும் சரி என பேசத்தொடங்கினாள்.1989 ல் ஜூலை பத்தாம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்தேன்.எல்லோரும் பிறந்து ஒரு வாரம் கழித்துதான் பெயர் சூட்டுவர் ஆனால் எனக்கு பிறந்தவுடன் என்னை பார்த்த அனைவரும் அட கருவாச்சி என பெயர் வைத்தனர்.அன்று ஆரம்பமானது எனது வாழ்க்கையின் போராட்டம்.என் தாயை தவிர யாரும் என்னை கொஞ்சமாடடார்கள்.அதன்பிறகு எனக்கு மாலினி என்று பெயர் சூட்டினர் ஆனால் அந்த பெயர் சொல்லி யாரும் அழைக்கமாட்டார்கள். ஏ கருவா என்றுதான் கூப்பிடுவர்.பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன் அங்கும் அதேபிரச்சனைதான்.தாத்தா வீட்டுக்கு போனால் மாமா பசங்கள கொஞ்சுவாங்க நான் அதை பார்த்து ஏங்கி அழுதிருக்கேன்.எல்லாரும் சொல்லுவாங்க நீ மூக்கு முளியுமா அழகா இருக்கையே ஆனா கருப்பு பெறந்துட்ட என்ன செய்ரது எதோ உலகத்திலே பெரிய தவறுமாறி பேசுவாங்க.பள்ளி சென்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வந்தது.வகுப்பில் நான்தான் முதல் மதிப்பெண்எடுப்பேன் அதனால் எல்லோரும் நன்றாக பழக ஆரம்பித்தனர்.எல்லோரும் நல்லா பழகனும்டா நம்ம நல்லா படிக்கனும் முடிவெடுத்தேன். அன்றிலிருந்து அனைத்திலும் முதலாவதாக வந்தேன்.எனினும் எனக்கு நாடகம்,கவிதை,ஆடலிலும் ஆர்வம் அதிகம் இருந்தது.பள்ளியில் நடைபெற்ற அனைத்திலும் கலந்து கொள்வேன் அப்பொழுதுதான் அடுத்த அவமானம் தொடங்கியது.நன்றாக நடித்தாலும் எனக்கு முக்கியமானகதாபாத்திரத்ததிரம் தரமாட்டார்கள். ஆடும்போதும் கடைசியில்தான் நிறுத்துவார்கள்.அது என்மேல் என்னையவே மிகவும் கோபப்பட வைத்தது.கண்ணாடி ஒன்றுதான் என் கஷ்டங்களை சொல்லி அழுவதற்கு ஆறுதலாக இருந்தது.நாங்க ஒருநாள் சினிமாவிற்கு சென்றோம் அப்பொழுது நம்மளும் ஒருநாள் இப்படி நடிப்போ என்று என் மாமா பொண்கிட்ட சொன்னே அதுக்கு அவ நான் நடிப்பேன் உன்னைய எப்படி நீ முதலில் பள்ளி நாடகத்தில் நடி அப்புறம் பாப்போம் என்றால் அன்றிலிருந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தே ஆகவேண்டும் என்ற உறுதி எடுத்தேன்.அப்போதுதான் நான் 11ம் வகுப்பு படிக்க புது பள்ளிக்கு சென்றேன்.அது ஒரு பாரம்பரிய பள்ளி என்பதால் நாடகம் போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடைபெறும் அங்கும் அனைத்திலும் கலந்து கொள்வேன்.என் திறமையை ஆராய்ந்த பாத்திமா ஆசிரியர் அடுத்த மாதம் வரும் மாவட்ட அளவிளான போட்டியில் மாலினியை கதநாயகியாக போடலாம் என அனைத்து ஆசிரியர்களிடமும் கூறினார் ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.பல போராட்டங்களுக்கு பிறகு சம்மதித்தனர்.அனைத்திலும் முதலாவதாக வரும் எனக்கு ஏன் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்திய எனக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.மிகவும் ஆர்வத்துடன் பயிற்சி செய்தேன் அந்த நாளும் வந்தது.எங்கள் குழுவுடன் சென்றோம்.கடைசியில் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் சொதப்பியதால் நாடகம் கலையிழந்தது.நாங்கள் அன்று பரிசை இழந்தோம்.என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.பாத்திமா ஆசிரியர் இது உன் தவறல்ல நீ சிறப்பாக நடித்தாய் என்று ஆறுதல் கூறினார்.நான் மறுநாள் பள்ளி சென்றபோது கருப்பாக இருக்கும் இவள் கதாநாயகியாக போட்ட எப்படி வெற்றிபெற முடியும் என்று புறம் பேசி கிண்டல் செய்தனர்.சிலர் என்னிடம் வந்து இதலாம் உன்னால் முடியாது போய் வேற வேலைய பாரு சொல்லி என்னை பார்த்து சிரித்தனர்.அதலும் சிலர் ஆறுதல் கூறினர்.அந்த ஆறுதல் வேறுவழியில் செல்ல தூண்டியது நாட்கள் கழிந்தன 12ம் வகுப்பு வந்தவுடன் படிப்பில் கவனம் செலுத்தினேன் முழுத்தேர்வு முடிந்தது தேர்வு மதிப்பெண் வந்தது 1175 பெற்றேன்.வீட்டில் அனைவரும் மருத்துவருக்கு படி என்றனர்.என் மனம் முழுவதும் என்னை பார்த்து சிரித்தவர் மத்தியில் பெரிய கதாநாயகியாக வர வேண்டும் எனகூறி கொண்டே இருந்தது.பாத்திமா ஆசிரியர் உதவியுடன் வீட்டில் பல போராட்டங்களுக்கு பிறகு திரைப்படத்துரையை உயர்கல்வியாக தேர்ந்தெடுத்தேன்.அங்கு சென்றால் அனைவரும் பணக்கார பசங்களும் மிகவும் பொழிவுடனும் தென்பட்டனர்.என் பயத்தை எனக்குள்ளே வைத்துகொண்டு அனைவரையும் கவர திறமையை நிலைநாட்ட முடிவெடுத்தேன்.எல்லோரும் என்னுடன் பேசி பழக தொடங்கினர். இனிமேல் என்போல் நிறத்தால் தாழ்த்தபடக்கூடாது என முடிவெடுத்து பல குறும்படங்களை இயக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.ஒளியற்றவள்,கரிசல்மண்,கலைசெல்வி போன்ற குறும்படம் மூலம் அழகிற்கும் நிறத்திற்கும் தொடர்பில்லை என்று மக்கள் மனதில் பசுமரத்தாணிபோல புரிய வைத்தேன்.எனது இறுதியாண்டில் ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படம் பெரிய வெற்றியை தேடி தந்தது.அதன்பிறகு மூன்று படங்களை இயக்கினேன் அதன்மூலம் பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றேன்.அவமானங்கள் மறைய தொடங்கியது எனினும் மனதில் ஏற்ற சபதம் நிறைவேறவில்லை என்னுடைய தயாரிப்பில் நானே நடித்து ஒரு படத்தை இயக்கினேன் ஆனால் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை பல விமர்சனங்கள் எழும்பியது.நான் சோர்ந்து போகவில்லை ஒரு வருடம் கழித்து நானே கதை எழுதி நடித்தேன் அதுதான் "அவமானம் made அலங்காரம் "மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பெரிய வெற்றியை தேடித்தந்தது அதன்பிறகு மக்கள் எனக்கு தொடர் வெற்றியை தந்தனர்.பல விருதுகளும் பெற்றேன்.குழவினர்கள் மிக்க நன்றி மேடம் உங்கள் அனுபவத்தை எங்களுடன்பகிர்நந்து கொண்டதற்கு என்று கூறினர்.நானும் நன்றி தெரிவித்தேன்.ஒரு கவிதை ஒன்று சொல்லுங்கள் அத்துடன் உறையை முடிக்கலாம் என்றனர்.ம்ம் சரி சொல்கிறேன்
இருள் சூழும்போது அதில்…குழந்தை அழும் சத்தம் கேட்டது திடீரென்று விழித்தேன்.அருகில் குழந்தை அழுதுகொண்டிருந்தது அதை தூக்கி அனைத்தவாறு என்னடி செல்லம் ஏ அழுகிறீங்க அம்மாச்சி எங்க என் அம்மாவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு அம்மா டிபன் ரெடி பண்ணு பத்து மணிக்கு இயக்குனரை பார்க்க போனும் கதை சொல்ல.குளிக்க போனேன்.நடந்த நிகழ்வு அனைத்தும் நினைவிற்கு வந்தது நடந்தா நன்றாக இருக்கும் என்று மனதில் நினைத்து கொண்டு அந்த கவிதையை குறிப்பேட்டில் எழுதிவிட்டு பயணத்தை தொடங்கினேன்…
"இருள் சூழும்பொழுது
இருளில் வாழும் அமாவாசையாவதும்
இருளுக்கு ஒளிதரும் நிலவாவதும்
அவர் அவர் கையில் உள்ளது.