சித்தி (பருவம் 2) அல்லது இன்னொரு சாரதாவின் கதை என்பது சன் தொலைக்காட்சியில் 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சித்தி என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.
இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்த ராதிகா சரத்குமார் என்பவர் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நிழல்கள் ரவி, நந்தன் லோகநாதன், தர்ஷனா, பிரீத்தி சர்மா போன்ற பலர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். க. சுலைமா...