உங்கள் கவிதை படைப்புகளை இந்த category-இல் பகிரவும்.
**சிரியாவில் கொரோனாவும் அந்நாட்டு மக்களின் மனதும்**
கொரோனாவால் உங்களுக்கு
பசி வந்தது
கொரோனாவால் உங்களுக்கு
பிணி வந்தது
கொரோனாவால் உங்களுக்கு
பஞ்சம் வந்தது
கொரோனாவால் உங்களுக்கு
நஷ்டம் வந்தது
கொரோனாவால் நீங்கள்
வீட்டிற்குள் அடங்கினீர்
கொரோனாவால் நீங்கள்
சந்தோசத்தை துறந்தீர்
கொரோனாவால் நீங்கள்
சுதந்திரத்தை இழந்தீர்
கொரோனாவால் நீங்கள்
பயந்து நடுங்கினீர்.
ஆனால்
கொரோனாவால் எங்களின்
பயம் தீர்ந்தது
கொரோனாவால் எங்களின்
பதட்டம் தீர்ந்தது
கொரோனாவால் எங்களின்
உள்ளங்கள் மகிழ்ந்தது
கொரோனாவால் எங்களின்
வாழ்வு சிறந்தது
கொரோனாவால் நாங்கள்
சுதந்திரத்தை பெற்றோம்
கொரோனாவால் நாங்கள்
அணுகுண்டிலிருந்து தப்பினோம்
கொரோனாவால் நாங்கள்
உயிர்களை காப்பாற்றிகொண்டோம்
கொரோனாவால் நாங்கள்
நிம்மதி அடைந்தோம்
ஆறு அறிவு மனிதன் கொடுக்காத
ஆறுதலை ஆச்சமூட்டும்
கண்கள் அறியா கிருமி
கருணையுடன் வாழ வைத்து
இயற்கை மனிதனை போல்
இரக்கம் இல்லாதது இல்லை என்று
சொல்லாமல் சொல்லி
சென்றது எங்கள் புன்னகையில் !
**நிழலின் அருமை**
உடனிருக்கும் போது
உதாசீனம் படுத்தி
விட்டு விட்டு சென்ற பின்
விட்டு கொடுத்து இருக்கலாமே என்று மதியை திட்டி
மனதை வாட்டி
மற்றவர் முன்
மண்டியிட்டு அழுது புலம்புவது
மனித இயல்பு போல …
நிழல் இருக்க
நிம்மதியாய் மரத்தடியில் உறங்க
ஓடி ஆடி விளையாடி
ஒய்யாரமாய் களைப்பாறி
இன்று முன்னேற்றம் என்று கூறி
காட்டை அழித்து
உன்னை நீயே அழித்து கொண்டாயே !