Community

80 இல்லை, ஆடி வந்தா 86!

“என்னங்க சொல்ல, இவங்க செய்வதை? யாருக்கு புதுசா கல்யாணம் ஆகியுள்ளது என்பதே குழப்பமாக உள்ளது” முகம் சுழிக்க கூறினாள் வினோ. எது பேசினும் மண்டை உருளும் என்பதை புரிந்து கொண்டு, காதில் எதும் கேட்டு கொள்ளாமல் நழுவினான் விக்ரம். பிறந்த வீட்டு நிகழ்வை பற்றி பேசினால் மூக்கை நுழைப்பது நன்றன்று என தன் தந்தை கூற கேட்டிருக்கிறான். " புதுசா வந்த பொண்ணு என்ன நெனச்சிபா? " திட்டிக்கொண்டே வேலை செய்தாள்.

“ஹலோ, அக்கா நான் அகிலா பேசுறே” , “ஹா, பூது பொண்ணு சொல்லு மா” என்று குதூகலமாக பேசத் தொடங்கினாள் வினோ, “அப்ரோம், எங்க அம்மா என்ன பண்றாங்க? , எதாவது கிருக்குத்தனமா பண்ணுவாங்க, கண்டுக்காத” பேச்சு தொடர்ந்தது ஒரு அரை மணி நேரம்.

வினோவின் தம்பிக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதம் ஆகிறது. காதல் திருமணம் ஆயினும் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது சென்ற மாதம் வரை. திடீரென ஒரு நாள் வினோவின் அம்மா, " நாங்கள் உதகையில் உள்ள அப்பாவின் காட்டேஜ்ல நாங்கள் சென்று தங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். நீயும் அவனும் இங்க இருந்துக்கோங்க மா அகிலா " என்று கூற, பதறிப்போனான் விக்னேஷ். இது போதாதென “கடமைகள் முடிந்ததால், நாங்கள் இனி வாரம் ஒரு முறையாவது பீச் செல்வோம்” என்று கிளம்பிவிடுகிறார்கள் காலை எழுந்தவுடன். இப்போதான் கல்யாணமாகியுள்ளது பயனுக்கு, புதுசா வந்த மருமகளுக்கு ஒத்தாசையா இருப்போமேனும் இல்ல, என அன்று தொடங்கி தாய்க்கும் மகளுக்கும் பேச்சில்லை.

"இப்போதுப் புதிதாக 80 ஆம் கல்யாணம் வேணுமாம் என் தந்தைக்கு " சலித்துக்கொண்ட வினோ அகிலாவுடன் பேசினால்.

ஆனால் என்னவோ தெரியவில்லை மருமகளுக்கு அவ்வளவு செல்லம். தாய் தந்தையாய் பார்த்துக்கொண்டார்கள் விக்னேஷின் பெற்றோர்.

அகிலாவும் தோழியாய் இருந்தால் இருவர்க்கும். விக்னேஷ் அவர்களை beech செல்லவேண்டாம் என்று கூறினால், தானே கூட்டிக்கொண்டு சென்று விடுவாள்.

வினோவ்க்கும் விக்னேஷுக்கும் 8 வயது வித்தியாசம். வினோ பிறக்கும்போதே அவர்களுக்கு கொஞ்சும் வயதாகிவிட்டதால், அவ்வளவு ஓட்டல் இல்லை மகளுக்கு. பள்ளிக்கு சென்றால் அணைத்து தோழர்களின் பெற்றோரும் இளமையாக, மாடர்ன் ஆக வெள்ளையாக இருக்க, இவர்கள் மட்டும் கிராமத்து ஆட்களாக இருப்பது இவளுக்கு ஒரு மாதிரி போனது.

ஆனால் விக்னேஷ் அப்படி இல்லை. அவனுக்கு அதீத பாசம் பெற்றோருடன்.

நாம கதைக்கு வருவோம்.

அக்கா, அவர்கள் என்ன கேட்கிறார்கள், காசா பணமா, அவர்களுக்கு பிடித்ததை செய்ய நாம் தடையாகலாமா? அம்மா எனக்கு ஒரு தொந்தரவும் தருவதில்லை என சமாதானம் செய்த்துவிட்டு வந்தாள்.

என்ன கேர்ள் சொன்னா மை பொண்ணு? என்று கேட்டார் அப்பா. குட் வெரி நைஸ் அப்பா என கண் விரிக்க பாராட்டினாள் அகிலா.

ஆங்கிலம் கற்று கொடுத்து வந்தாள் அகிலா. ஒரு மாதத்தில் நிறைய கற்று கொண்டுவிட்டார்கள்.

அடுத்த நாள் வீட்டில் பெரிய சண்டை.
"இப்போது, வீட்டின் சூழ்நிலையில் 80 ஆம் கல்யாணம் தேவைதானா? " சீறினாள் அகிலா.
"என்ன சூழ்நிலை? வருமானம் குறைவுதான் விக்னேஷ்கு ஆனால் என் பென்ஷன் இருக்கே."சுத்தம் அடுத்து அதை தீர்க்க திட்டமா? " “அக்கா கொஞ்சும் பொறுமை, அவர்கள் விரும்புவதை செயது விடலாமே.” என்றான் விக்னேஷ். நீ பேசாம இருடா, அவ பேசறதை பேசட்டும், என்றார் தந்தை.
"இது போதாதென , அது முடிந்த கையோடு இவர்கள் ஊட்டிக்கு கிளம்புகிறார்களாம். இவருக்கு 80 வயதில் இதெல்லாம் ஓவரா இல்லை? ஊரு என்ன பேசும், இவர்கள் ஆட்டத்தை பார்த்து? "
"என்ன சொன்னா?, ஏனக்கு 80 வயதா? யார் சொன்னா? "
"இது என்ன புது கதை? நீங்கதானே 80 ஆம் கல்யாணம் வேண்டும் என்று சொல்கிறீர்கள், இப்போது என்ன குழப்புகிறீர் "?
"எனக்கு 86 வயது அடுத்த ஆடி வந்தால், 80வயதில் செயதிருக்கணும், ஆனால் விக்னேஷ்கு கல்யாணம் ஆகிட்டா, புது பொண்ணோட கொண்டாடலாம்னு இதை பதில் பேசல. அதுவும் இன்றி, மங்களாவுக்கு இந்த மாதம் 80வயது முடிகிறது. அவளுக்கும் எனக்கும் சேர்த்துக் கொண்டாடி விடலாம் என்று தோன்றியது, அதனால் தான் இந்த முடிவு என்று அவர் கூறி முடிப்பதற்குள், வினோவுக்கு கோவம் தலைக்கு எரிவிட்டது. ஏதோ பண்ணித்தொலைங்க என்றவள் கிளம்பிவிட்டாள் வீட்டை விட்டு.
அகிலாவுக்கும் விக்னேஷ்கும் சிரிப்பு அடங்கவில்லை, அம்மாவுக்கு வெக்கம் தாங்கவில்லை, என்னங்க இப்டி இவர்களுக்கு முன்னாடி சொல்லிவிட்டேங்க? அடியேய் அகிலா, ஓவரா சிரிச்சா, உன் புருஷன் நல்லா அடி வாங்குவான், போடி, என்றாள் போய் சினத்துடன் அம்மா.
"ஆனால் எங்க கிட்ட கூட சொல்லலையே, இதுலாம் அநியாயமா இல்லை? ஆனாலும், வயச பத்தி பேசியவுடன் மனுஷனுக்கு என்ன கோவம்,"மீண்டும் சிரித்தார்கள் அனைவரும்.

இதுல என்ன இருக்கு, ஐ லவ் யூ மங்களா, என்றார் அவளை அணைத்து கொண்டு. இப்படி வாசப்படி முன்னாடி நின்றால், எல்லார் கண்ணும் படும், இப்டி வாங்க என அவர்களை இழுத்தாள் அகிலா. உப்பையும் மிளகையும் எடுத்துவந்து தலையை சுற்றி போட்டு, மூன்று முறை துப்பி, சாலையில் போட சென்றாள் அகிலா.

வினோ மீண்டும் வந்து கொண்டிருந்தாள். “எங்க அம்மா இன்னிக்கு செஞ்ச வடை நல்லா இருந்துது. யாருக்கும் தெரியாமல் ஒரு ஐந்து போட்டுக்கொடு இதில்” என ஒரு பாத்திரத்தை நீட்டினாள்.
"உங்களுக்கு உளுந்து ஆகாதே அக்கா? ", “எனக்கில்லை என் அவருக்கு” என்றாள் வினோ.
நீங்கள் சொன்னமாதிரியே வந்துட்டா அவள், என்று மெதுவாக அம்மாவிடம் கூறிவிட்டு, ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வடையை யாருக்கும் தெரியாதது போல், புடவையில் பாத்திரத்தை மறைத்து வந்து கொடுக்க, அதை அவசரமாக எடுத்துக்கொண் டு சென்றாள் வினோ.

Kadhaiyin order seriyaaga illai… ezhudhum thiramai irukiradhu… aanal yen sorvodu ezhudhineergal endru theriyavillai… Vaazhthukal…

1 Like